செய்திகள் :

பிகார்: தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காலமானார்!

post image

பாட்னா : பிகார் மாநிலத்தில் தலித் பிரிவினருக்கு பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் அளித்து வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் மாரடைப்பால் இன்று(டிச. 29) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரியாக சேவையாற்றி ஓய்வு பெற்ற ஆச்சார்யா கிஷோர் குணால், மஹாவீரர் கோயில் அறக்கட்டளை (மஹாவீர் மந்திர் டிரஸ்ட்) நிறுவனரும் அதன் செயலரும்கூட. முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங் மற்றும் சந்திர சேகர் ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் இவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்.

இவரது தலைமையின்கீழ், பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த இடங்களில் நூறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பாட்னாவிலுள்ள அனுமன் கோயில், ஹாஜிபூரிலுள்ள ராம் சௌரா ஆலயம், புத்த கயாவிலுள்ள ஜகந்நாதர் ஆலயம், வைஷாலியிலுள்ள சதுர்முக மகாதேவர் ஆலயம், முஸாஃபரிலுள்ள கரீப் நாதர் ஆலயம் உள்பட பல கோயில்கள் அவற்றுள் அடக்கம்.

இவரது திறன்மிகு நிர்வாகத்தால் ஆயிரக்கணக்கான கோயில்கள் புனரமைக்கப்பட்டதுடன், கோயில் நிலப் பகுதிகள் ப்ளாட் போட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, பிகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா பகுதியில் ரூ. 500 கோடியில் ‘ராமாயண கோயில்’ எழுப்பப்பட்டதற்கு இவரது முயற்சியே முக்கிய காரணமாகும்.

புத்தகங்கள் பல எழுதியுள்ள மறைந்த குணால், தலித் பிரிவு மக்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவராவார். தலித் மக்கள் குறித்து அவர் எழுதிய புத்தகங்களில் குறிப்பிடும்படியாக ‘தலித் தேவோ பவ’ பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவர் எழுதிய ‘அயோத்தியா ரீவிசிட்டெட்’, ராமர் கோயில் - பாபர் மசூதி இடம் விவகார வழக்கு விசாரணையின்போது தகவல் சரிபார்ப்பு உள்பட பல்வேறு விஷயங்களில் உதவிகரமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அவரது முயற்சியால் பிகார் தலைநகர் பாட்னாவிலுள்ள மஹாவீர் ஆலயம் உல்பட பல்வேறு முக்கிய கோயில்களில் தலித் பிரிவைச் சேர்ந்தோர் பூசாரிகளாக நியமிக்கப்படுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், காமேஷ்வர் சிங் தர்பங்கா சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தராக 4 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில், உயர் சாதிப் பிரிவாக கருதப்படும் ‘பூமிஹார்’ சமூகப்பிரிவில் பிறந்தவரான குணால், தனது மகன் சாயன் குணாலுக்கு தலித் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவரது மருமகள் ஷாம்பவி சௌத்ரி பிகார் அமைச்சர் அசோக் சௌத்ரியின் மகள் என்பதும் சமஸ்திபூர் மக்களவை தொகுதி உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், குணாலை ‘திறன்மிகு நிர்வாகி’ என்று போற்றியுள்ளார். ராஷ்திரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகார் துணை முதல்வர் சம்ராட் சௌத்ரி, பிகார் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உள்பட தலைவர்கள் பலரும் குணால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூன்று வகை வங்கிக் கணக்குகள் இன்றுமுதல் மூடல்!

செயல்பாட்டில் இல்லாத மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான ... மேலும் பார்க்க

“புத்தாண்டு மகிழ்ச்சியை தரட்டும்” -பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது.நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்க... மேலும் பார்க்க

புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை: மத்திய அரசு

மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் புதிய இடங்களுக்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வரும் 2026, மார்ச் 31ஆம... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்."வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவ... மேலும் பார்க்க

வெளிநாடுகளின் பெயரில் போலி நோய் எதிர்ப்பு மருந்துகள்: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபர்வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என பெயர் பொறிக்கப்பட்ட மருந்துகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கேட... மேலும் பார்க்க

நிதியமைச்சக கணினிகளில் சீனா இணையவழி ஊடுருவல்

தங்கள் கணினிகளில் சீன அரசுடன் தொடா்புடையவா்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அமெரிக்க நிதியமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது மிகப் பெரிய அத்துமீறல் சம்பவம் என்றும் அமைச்சகம் விமா்சித்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க