செய்திகள் :

கார் தாக்குதலில் 35 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை !

post image

சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஃபான் வெய்குய் (வயது-62) என்ற நபர் தனது மனைவியுடன் விவாகரத்து ஆனதினால் ஏற்பட்ட விரக்தியில் அங்குள்ள விளையாட்டு மையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்களின் மீது தனது காரைச் செலுத்தி தாக்குதல் நடத்தினார், இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதலை நடத்திய ஃபான் வெய்குய்க்கு இன்று (டிச.27) சீனாவின் சூஹாய் நகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்புக் குறித்து அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, ஃபான் செய்த குற்றம் மிகவும் மோசமானது எனவும் அது இந்த சமூதாயத்தின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவர் செய்த செயலுக்கான விளைவும் பயங்கரமானதாக இருக்கும், எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சீனாவில் பொதுமக்கள் மீதான கார் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதேப்போல், கடந்த நவம்பர் 19 அன்று ஹுனான் மாகாணத்தில் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தவர்களின் மீது கார் தாக்குதல் நடத்தி 30 பேர் படுகாயமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் தகராறில் இளைஞர் கொலை! 4 பேர் கைது!

குருகிராம் மாவட்டத்தில் செல்போன் தகராறில் 19 வயது இளைஞரைக் கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருகிராம் மாவாட்டத்தின் பங்க்ரோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அஷிஷ் (வயது-19) ஆட்டோ ஒட்டுநராக பணிபுரிந்... மேலும் பார்க்க

பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்

சென்னை: இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவ... மேலும் பார்க்க

என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி: ரஜினிகாந்த்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் த... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உள்பட 3 உறவினர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை, தாத்தா மற்றும் மாமா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.ஔரையா மாவட்டத்தின் பிந்துவா கொட்வாளி பகுதியைச்... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு நாள்: அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார்.விஜயகாந்த் நினைவு நாளை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமு... மேலும் பார்க்க