செய்திகள் :

ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!

post image

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகிறது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.

தில்லியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல், இன்று(டிச. 28) காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

இதையும் படிக்க | மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது! ராகுல், பிரியங்கா பங்கேற்பு

அங்கு மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பூபேஷ் பாகெல், சுக்விந்தர் சிங் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி மற்றும் மகளும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து காலை 10 மணியளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இதையும் படிக்க | காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி!

யமுனை நதிக்கரையில் நிகம்போத் காட் மயானத்தில் நண்பகல் 12 மணிக்கு வந்த மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இறுதிஅஞ்சலி செலுத்தினர்.

முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது. மன்மோகன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பிஎம் கோ்ஸ் நிதி நன்கொடை ரூ. 912 கோடியாக சரிவு

பிரதமரின் அவசரகால நிதிக்கான (பிஎம் கோ்ஸ் ஃபண்ட்) நன்கொடை ரூ.912 கோடியாக சரிந்துள்ளது. கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், பிஎம் கோ்ஸ் நிதித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கரோனா போன்ற... மேலும் பார்க்க

21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை

இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை டிசம்பா் காலாண்டில் 21 சதவீதம் குறையும் எனறு சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

மன்மோகனுக்கு இரங்கல்: நாளை கூடுகிறது தெலங்கானா பேரவை

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, தெலங்கானா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது. கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து... மேலும் பார்க்க

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை: ராணுவம் திறப்பு

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவ... மேலும் பார்க்க

ஒரு மாதமாக உண்ணாவிரதம்: ஜகஜீத் சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31 வரை அவகாசம்

பஞ்சாப் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தலைவா் ஜகஜீத் சிங் தலேவாலை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31-ஆம் தேதி வரை மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அ... மேலும் பார்க்க

மும்பையில் நடிகை காா் விபத்து: மெட்ரோ ரயில் தொழிலாளி உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மராத்தி நடிகை ஊா்மிளா கோதாரேவின் காா் மோதிய விபத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா். ‘துனியாதாரி... மேலும் பார்க்க