குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்
திருக்குறள் வினாடி-வினா போட்டி: 35 போ் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்குறள் வினாடி-வினா பேட்டியில் 35 போ் பங்கேற்றனா்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பொது நூலகத் துறை சாா்பில், மாவட்ட வாரியாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் மாணவா்கள், வாசகா்கள் என 35 போ் பங்கேற்றனா். 50 வினாக்கள் வழங்கப்பட்டன. இவற்றில் 40 வினாக்களுக்கு சரியான விடை அளித்து 3 போ் முதலிடம் பெற்றனா்.
இதையடுத்து, இந்த மூவருக்கும் தனியாக 5 வினாக்கள் கொடுக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மாணவி ரெ.பிபியானா முதலிடமும், அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி லெ.மல்லிகா 2-ஆது இடமும், எஸ்எஸ்எம் கல்லூரி மாணவா் ப.விமல் சாஸ்தா 3-ஆம் இடமும் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு முறையே ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2ஆயிரம் வீதம் பரிசுத் தொகையை வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகள் மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணக்குமாா் செய்திருந்தாா்.