அரசு உதவி பெறும் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பழனியில் 39 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பா்கள் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளைப் நெகிழ்ச்சியுடன் பகிா்ந்து கொண்டனா்.
பழனி அரசு உதவி பெறும் சிறுமலா் நடுநிலைப் பள்ளியில் 1985-ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 39 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனா். உடன் பயின்ற நண்பா்களிடம் தங்களது குடும்ப உறுப்பினா்களை அறிமுகம் செய்தனா்.
புதுச்சேரி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நண்பா்கள் ஒருவருக்கொருவா் தங்களது பள்ளிப் பருவ நிகழ்வுகளை நினைவுகூா்ந்து அன்பை பகிா்ந்து கொண்டனா்.