செய்திகள் :

Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்... அறிவியல் காரணம் என்ன?

post image

Indonesia: உலகம் முழுவதிலும் உள்ள காடுகளிலும் மலைகளிலும் கடலோரங்களிலும் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பர்.

பல்லாயிரம் ஆண்டுகலாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறையை பின்பற்றும் சில பழங்குடியினர் தனித்துவமாக உடலமைப்பைப் பெற்றிருக்கின்றனர். அப்படி இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியத்தில் வசிக்கும் பட்டன் பழங்குடி மக்கள் தனித்துவமான நீல நிறக் கண்களைப் பெற்றிருக்கின்றனர்.

பொதுவாக மனிதர்களின் கருவிழி எனப்படும் ஐரிஸின் நிறம் பழுப்பு. நம் உடலில் இருக்கும் மெலனின் என்ற நிறமியின் சுரப்பைப் பொருத்து தோல், முடி மற்றும் கருவிழியின் நிறம் மாறுபடும்.

கருவிழியின் நிறம் ஐரிஸில் இருக்கும் சிறப்பு செல்களில் இருக்கும் மெலனினைப் பொருத்து அமைகிறது. இந்த மெலனின் அளவை 16 மரபணுக்கள் தீர்மானிக்கின்றன.

இந்தோனேசியாவில் உள்ள பட்டன் பழங்குடி மக்களில் பலரும் வார்டன்பர்க் சிண்ட்ரோம் (Waardenburg syndrome) என்ற மரபணு பிறழ்வால் பாதிக்கப்பட்டிருப்பதனால் நீல நிற கண்களைக் கொண்டிருக்கின்றனர்.

வார்டன்பர்க் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்கள் பிறவி காது கேளாமை மற்றும் நிறமி கோளாறுகள் ஏற்படலாம். இதன் விளைவாக பிரகாசமான நீல கண்கள், வெள்ளி நெற்றி, தோலில் வெள்ளை திட்டுகள் ஏற்படும்.

பட்டன் என்பது (Buton, Butung, Boeton, Button) இந்தோனேசியாவிலிருக்கும் தீவின் பெயர். இது மழைக்காடுகளால் நிறைந்துள்ளது. இங்குள்ள வன விலங்குகளுக்காக பெயர்பெற்றது. கூர்மையான கொம்பு உடைய அனோவா (anoa) எருமைகள் உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. அவற்றில் பட்டன் தீவும் ஒன்று.

NASA: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப மேலும் தாமதமாகலாம் - காரணம் என்ன?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்ப 2025 மார்ச் மாத இறுதி வரை ஆகலாம் எனக் கூறியிருக்கிறது NASA. க்ரூ-10 என்ற பத்தாவது விண்வெளிக்க... மேலும் பார்க்க

Brain: நினைவாற்றலையும், அறிவாற்றலையும் மேம்படுத்த 30 நிமிடங்கள் போதும் - ஆய்வில் புதிய தகவல்!

தினசரி காலையில் உற்சாகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெரியவர்கள் அவர்களது உடல் மட்டுமல்ல மன நலனையும் சிறப்பாகப் பேணுகின்றனர் என்பது சமீபத்திய ஆய்வில் உறுதியாக நிரூபணமாகியிருக்கிறது.ஆய்வு மேற்கொண்டது யா... மேலும் பார்க்க

1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் `வைர பேட்டரி'யை உருவாக்கிய விஞ்ஞானிகள்! - எதற்கெல்லாம் பயன்படும்?

அறிவியலாளர்கள் நீண்ட நாள்களுக்கு தாக்குபிடிக்கக் கூடிய பேட்டரியை உருவாக்கியிருக்கின்றனர். இது ஆயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து கருவிகளுக்கு மின்னூட்டக் கூடியது என்கின்றனர்.ரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்... மேலும் பார்க்க

Jeff Bezos: 100 பில்லியன் டாலர் செலவில் புதிய Space Station; விண்வெளி சுற்றுலாவின் அடுத்த பாய்ச்சல்?

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடிவதற்கான கவுண்டன் தொடங்கிவிட்டது. 2031 ஆண்டோடு அது வேலை செய்வதை நிறுத்திக்கொள்ளும்.அதற்குப் பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இப்போதுள்ள சர்வதேச விண்... மேலும் பார்க்க