மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி!
கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,76,857 லட்சம் கோடி ரூபாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை(1.65 லட்சம் கோடி ரூபாய்) ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!
டிசம்பரில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி 4 சதவீதம் அதிகரித்து ரூ. 44,268 கோடியாகவும் உள்ளது. இந்த மாதத்தில் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.22,490 கோடியாகும்.
இதுவே கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.82 லட்சமாக (8.5% உயர்வு) இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 2024 ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.