செய்திகள் :

பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 8 பேர் பலி!

post image

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டத்தில் பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.

பட்டிண்டா மாவட்டத்திலிருந்து டல்வாண்டி சாபோ எனும் ஊரை நோக்கி இன்று (டிச.27) 45 பயணிகளுடன் ஒரு தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, ஜீவன்சிங்வாலா எனும் கிரமத்திலுள்ள ஒரு பாலத்தின் மீது வந்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, கீழே சென்றுக்கொண்டிருக்கும் லசாரா கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இதையும் படிக்க: 2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!

இதில், 8 பேர் பலியானார்கள். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசியப் பேரிடர் மீட்புக் குழு ஒன்று சம்பவிடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை அதற்கான காரணமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்

மன்மோகன் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்... மேலும் பார்க்க

தன்னைத் தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபர் கொலை! நண்பர்கள் கைது!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபரை பணத்திற்காக கொலை செய்த நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மயூர்பஞ்சின் நதிக்கரையோரமாக பாதி எரிந்த நிலையில் ஒரு இளைஞரின் உடல்... மேலும் பார்க்க

செல்போன் தகராறில் இளைஞர் கொலை! 4 பேர் கைது!

குருகிராம் மாவட்டத்தில் செல்போன் தகராறில் 19 வயது இளைஞரைக் கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருகிராம் மாவாட்டத்தின் பங்க்ரோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அஷிஷ் (வயது-19) ஆட்டோ ஒட்டுநராக பணிபுரிந்... மேலும் பார்க்க

பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்

சென்னை: இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவ... மேலும் பார்க்க

என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி: ரஜினிகாந்த்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் த... மேலும் பார்க்க