மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2,701 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 2,886 கன அடியிலிருந்து 2,701 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க |நானறிந்த மன்மோகன் சிங்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.63 அடியிலிருந்து 119.72 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.26 டிஎம்சியாக உள்ளது.