Aus v Ind : 'திணறும் இந்தியா; மீண்டும் ஃபாலோ ஆனை தவிர்க்க போராட்டம்'
BB Tamil 8: 'என்னால முடியல, நானும்...' - சியமந்தா கிரணிடம் சொல்லி அழுத பவித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவைப் பார்க்க பிக் பாஸ் விஷ்ணு வந்திருந்தார்.
சௌந்தர்யா விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இரண்டாவது ப்ரோமோவில் அருணைப் பார்க்க அர்ச்சனா வந்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவைப் பார்க்க அவரது ப்ரெண்ட் சியமந்தா கிரண் வந்திருக்கிறார்.
'நானும் ஒவ்வொரு முறையும் அழக்கூடாதுனுதான் நினைக்கிறேன் ஆனா என்னால முடியல. இதுதான் என்னுடைய கேரக்டரானு தெரியல. பண்ணத சொல்லிக் காமிக்குற பழக்கம் எனக்கு இல்ல ' என்று பவித்ரா சொல்ல' சியமந்தா கிரண் நீ நல்லா விளையாடுற உன்கிட்ட சொல்லுற மாதிரி எந்தக் குறையும் இல்ல.
சண்டைப்போட்டு சத்தம் போட்டு விளையாடுனாத்தான் கேம்னு அர்த்தம் இல்லனு நீ நிருபிச்சுக் காட்டிட்ட' என்று பவித்ராவை தேற்றுகிறார்.