Serial Update : `கர்ப்பமானதை அறிவித்த சங்கீதா டு திருமணம் செய்து கொண்ட `நெஞ்சத்தை கிள்ளாதே' நடிகை
வாழ்த்துகள் மதுமிதா - விஷ்ணு ஜோடி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் மதுமிதா இளையராஜா. இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்.
மதுமிதாவிற்கும் விஷ்ணு சேகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. மதுமிதா - விஷ்ணு ஜோடிக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் கிங்ஸ்லி - சங்கீதா!
சின்னத்திரை, வெள்ளித்திரை எனத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர் சங்கீதா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ஆனந்த ராகம்' தொடரிலும், கனா காணும் காலங்கள் வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சங்கீதாவிற்கும் நடிகர் கிங்ஸ்லிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும் எழுந்தன. இருவரும் புன்னகையுடனே அனைத்தையும் எதிர்கொண்டனர். இந்நிலையில் சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்த நட்சத்திர ஜோடிக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். வாழ்த்துகள் கிங்ஸ்லி - சங்கீதா!
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர் `இந்திரா'. இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர் ஃபெளசி. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிப்பாரா? எனத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் பலர் கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது.
ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்றில் ஃபெளசி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.