ராஜபாளையம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போட்டோகிராபர் போக்சோவில் கைது
BB Tamil 8: 'இவ்வளவு நாள் தீபக் அண்ணா இந்த வீட்டில...' - பிக் பாஸ் வீட்டில் ஈரோடு மகேஷ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இறுதிக் கட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கி இருக்கும் நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவைப் பார்க்க பிக் பஸ் விஷ்ணு வந்திருந்தார்.
சௌந்தர்யா விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்த காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இரண்டாவது ப்ரோமோவில் அருணைப் பார்க்க அர்ச்சனா வந்திருந்தார். அதன் பிறகு பவித்ராவைப் பார்க்க அவரது ப்ரெண்ட் சியமந்தா கிரண் வந்திருந்தார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்துக்குமரன் மற்றும் மஞ்சரியைப் பார்க்க ஈரோடு மகேஷ் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். "வெளில இருந்து பார்க்கிறவர்களுக்கு முத்து, மஞ்சரி பார்க்க வந்திருக்கேன்னுதான் தெரியும். ஆனா நான் உங்க எல்லாரையும் பார்க்க வந்திருக்கேன். எனக்கு இதுல ரொம்ப சர்ப்ரைஸிங் இருக்கிறது தீபக் அண்ணாதான்.
இவ்வளவுநாள் இந்த வீட்டில இருப்பாரு. இப்படி விளையாடுவாருனு நான் நினைக்கல. பிக் பாஸ்ல இருக்கிற இந்த 100 நாளும் பெரிய லைஃப் டைம் சிலபஸ் மாதிரி. இந்த சில்பஸை யார் சரியாக எடுத்திட்டு போறீங்களோ வாழ்க்கை முழுவதும் நீங்க சந்தோஷமாக இருக்க போறீங்கனு அர்த்தம்" என்று மகேஷ் பேசியிருக்கிறார்.