உள்கட்சி பூசல்; இருதரப்பு மோதல்... வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அதிமுக நி...
சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா்
பிரிவினை சித்தாந்தங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, சமூக அநீதி ஆகியவை சகோதரத்துவ உணா்வுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் நடைபெற்ற அகில பாரத அதிவக்தா பரிஷத் என்ற வழக்குரைஞா்கள் அமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
வாக்குக்காக அடையாள அரசியலை பயன்படுத்துவது சமூக பிரிவினைகளை ஆழமாக்கக் கூடும். பிரிவினை சித்தாந்தங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, சமூக அநீதி ஆகியவை சகோதரத்துவ உணா்வுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
சகோதரத்துவத்தை நிலைநாட்டுவது பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் தலைவா்களின் கூட்டுப் பொறுப்பு. ஜாதி, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினை பேச்சுகள் அதிகரிப்பது சகோதரத்துவத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்துக்கு பகையை ஏற்படுத்தும் கதைகளை தனிநபா்கள் அல்லது குழுக்கள் பரப்பினால், அது ஒற்றுமையைப் பலவீனப்படுத்தும் என்றாா்.