செய்திகள் :

உள்கட்சி பூசல்; இருதரப்பு மோதல்... வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி..!

post image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நிர்வாகிகள் மோதல் தொடர்பாக கட்சியினர் சிலரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், " மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் தச்சநேந்தலை சேர்ந்த சந்திரன்.

காவல்நிலையம்

இவருக்கும் முன்னாள் ஒன்றிய செயலாளரான பூமிநாத் என்பவருக்கும் இடையே சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் மாறுதலில் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த பூமிநாத் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தச்சநேந்தலை சேர்ந்த சந்திரனுக்கு புதிதாக ஒன்றிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதுமுதலே பூமிநாத்துக்கும், சந்திரனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களின் மோதல்போக்கு கட்சி விவகாரங்களில் மட்டுமல்லாமல், கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் வாட்ஸப் குழுக்கள் வழியாகவும் தொடர்ந்திருக்கிறது.

இந்தநிலையில் ஒன்றிய செயலாளர் சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பூமிநாத்தின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் உள்மாவட்ட கட்சி வாட்ஸ் அப் தளத்தில் பதிவு ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த பதிவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியை விமர்சித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளரான கே.சி.பிரபாத் என்பவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக அதே வாட்ஸ் அப் தளத்தில் குரல்பதிவினை பதிவு செய்தார்.

காவல்

அதில், ஒன்றிய செயலாளர் சந்திரனின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உட்கட்சிக்குள் சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும் பேசி இருக்கிறார்‌. அவர், அ.தி.மு.க. என்பது குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என சாதி பெயரை குறிப்பிட்டு பேசியது நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் கே.சி.பிரபாத்தின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.சி. பிரபாத் மற்றும் சந்திரன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக, தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்த கே.சி.பிரபாத், வானத்தை நோக்கி திடீரென சுட்டதில் மோதலில் ஈடுபட்ட எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சில இடத்தில் போதல் முடிவுக்கு வந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார், அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரித்தபோது, "அதிமுக நிர்வாகி கே.சி.பிரபாத் துப்பாக்கி வைத்திருப்பதற்கு முறையான உரிமம் பெற்றுள்ளார்.

துப்பாக்கி சூடு

மோதலின்போது, வீட்டு நபர்கள் தாக்கப்பட்டதால் என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காக துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டதாக கே.சி.பிரபாத் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனாலும் இந்த சம்பவத்தில் மிரட்டலுக்காக துப்பாக்கியை பயன்படுத்தியது குறித்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதேசமயம், வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக கே.சி.பிரபாத் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் சந்திரன் உள்பட மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுக கிளைச் செயலாளர் தனிக்கொடி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய செயலாளர் சந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

Doctor Vikatan: காதுக்குள் அழுக்கு... சொட்டு மருந்து போட்டால்தான் சுத்தமாகுமா?

Doctor Vikatan: சமீபத்தில், என்னுடைய இடதுகாதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே,காது, மூக்கு, தொண... மேலும் பார்க்க

Health: விருந்துக்குப் போறீங்களா? இத ஃபாலோ பண்ணலாமே...

''விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, ... மேலும் பார்க்க

``தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும்..'' - திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் வைரமுத்து!

`சிலை பேசாது, குறள் பேசும்' - அமைச்சர் தங்கம் தென்னரசுகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர... மேலும் பார்க்க

``கொண்டாடி கொண்டே இருப்போம்" - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!

திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே... மேலும் பார்க்க

Adyar park: பயன்படுத்த முடியாத நிலையில் பெருநகர பூங்கா... நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

சென்னையின் இதயப் பகுதியான அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா. இப்பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங... மேலும் பார்க்க

கடல் நண்டுச்சாறு முதல் அமிர்தப்பொடி வரை...சளி, இருமல் போக்கும் ரெசிபிக்கள்!

கடல் நண்டுச்சாறு நண்டுச்சாறுதேவையானவை:நண்டு - 10, நண்டின் சதைப்பகுதி (தனியாக) - 100 கிராம், பெரிய வெங்காயம் - 250 கிராம், பிரிஞ்சி இலை - 5 கிராம், மிளகு - 10 கிராம், ஏலக்காய் - 5 கிராம், கிராம்பு - 5 ... மேலும் பார்க்க