செய்திகள் :

``தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும்..'' - திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் வைரமுத்து!

post image

`சிலை பேசாது, குறள் பேசும்' - அமைச்சர் தங்கம் தென்னரசு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டுபாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டாம் நாளான இன்று திருவள்ளுவர் காட்சி கூடத்தை திறந்து வைத்தார்.

உலகில் திருவள்ளுவர் சிலைகள் எங்கெல்லாம் அமைந்துள்ளது என்பது குறித்து அங்கு வைக்கப்படிருந்த டிஜிட்டல் வழிகாட்டியை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் விழா மேடையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு உரையில் பேசுகையில், "வரலாற்றின் பார்வையில் உலகெங்கிலும் பல்வேறு சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. உலக உகழ்பெற்ற ரோடர் சிலை இன்று இல்லை. கடலலையை வென்று நிற்கின்ற திருவள்ளுவர் சிலையை கலைஞர் நிறுவினார். அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரதேவி சிலை பிரான்ஸ் நாட்டால் வழங்கப்பட்டது. ஆனால் திருவள்ளுவர் சிலை நம் மண்ணைக்கொண்டு. நம் கல்லைக்கொண்டு, நம் தொழிலாளர்களைக் கொண்டு, நம் கலையைக்கொண்டு உருவாக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா

சிலை என்பதற்கு பல பொருள்கள் உண்டு. சிலை என்ற சொல் திருக்குறளில் எந்த இடத்திலும் கையாளப்படவில்லை. கல் என்ற வார்த்தையை நடுகல்லுக்காக பயன்படுத்தியிருக்கிறார். கலைஞர் நிறுவிய சிலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மு.க.ஸ்டாலின் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். சிலை பேசாது, குறள் பேசும். குறள் பேசும் போது, கலைஞர் நினைவை போற்றும். இந்த சிலை உள்ளவரை முதல்வர் ஸ்டாலின் பெருமையையும் பேசும்" என்றார்.

`தமிழுக்கு அதிகாரம் தந்தவர்..' - வைரமுத்து

நிகழ்ச்சி தொடக்கத்தில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், "சில வரலாற்றுச் சங்கமங்கள் இங்கே நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. பூகோள சங்கமம், கடலியல் சங்கமம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழுக்கு அதிகாரம் தந்தவர் வள்ளுவ பேராசான், தமிழ்நாட்டுக்கு அதிகாரம் தந்தவர் ஸ்டாலின். தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும் ஒன்றுகூடுகின்ற சங்கமத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். முத்தமிழறிஞர் ஆசான் கலைஞருக்கு முதல் நன்றி, கால் நூற்றாண்டுக்குப்பின் வெள்ளி விழாவில் கருத்தரங்குக்கு அழைத்த முதல்வருக்கு அடுத்த நன்றி. திருவள்ளுவர் சிலைக்கு பேரறிவுச்சிலை என பெயர் வைத்ததற்காக நன்றி. தனி மனிதருக்கு, நிறுவனத்துக்கு, கட்சிக்கு அடையாளம் உண்டு. அதுபோன்று நிலத்துக்கு அடையாளம் உண்டு. வடவேங்கடம் தென்குமரி என்பார்கள். தமிழர்களின் அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோயில். வள்ளுவர் பேராசான் வகுத்துகொடுத்த குறள்கள்தான் அறிவு அடையாளம், ஞான அடையாளம்.

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் வைரமுத்து

`2000 ஆண்டுகள் ஆகியும் ஒரு எழுத்துக்கூட திருத்தப்படவில்லை'

அரசமைபுச் சட்டம் நிறுவப்படு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குத் தெரிந்தவரை 101 முறை திருத்தப்படுள்ளது இந்த அரசமைப்புச் சட்டம். ஆனால், எழுதப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகியும் ஒரு எழுத்துக்கூட திருத்தப்படாமல், மாற்றாமல் விளங்குகிறது திருக்குறள். எல்லா மெய் நூக்களுக்கும் மத ஆதரவு, அரசாங்க ஆதரவு இருந்தது. ஐரோப்பிய சட்டங்கள் கிரேக்க ரோமானிய மெய்நூல்களால் ஆக்கப்பட்டன. யூதர்களின் சட்டங்கள் விவிலியத்தின் பழைய ஏற்பாடுகளை கொண்டுதான் உருவாக்கப்பட்டது. திருக்குரானின் சட்டங்களை இஸ்லாத் ஏற்றுக்கொண்டது. ஆனால், எந்த மதத்தின் ஆதரவும் இல்லாமல், அரசனின் ஆதரவும் இல்லாமல் மிதந்து கரையேறியது தமிழனின் திருக்குறள். எல்லா உயிர்களும் இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, துன்பத்தில் முடிந்துபோகிறது. எல்லா உயிர்களும் இன்பத்தை விரும்புகிறது. ஆனால் வள்ளுவர் சொன்னார் இன்பம் வேண்டும் அதை தவிர்க்கவில்லை. ஆனால், அறத்தால் வருவதுதான் இன்பம் என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அரசன் எப்படி இருக்க வேண்டும் என வள்ளுவர் சொல்கிறார்.

58 மொழிகளில் திருக்குறள்..

அரசியலுக்கு இலக்கணம் வட நூலிலோ வேறு எந்த நூலிலோ இல்லை. `முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்க்கு இறை என்று வைக்கப்படும்' என்ற குறள் மூலம் கூறியிருக்கிறார். அதன்படி தமிழ்நாட்டு முதலமைச்சரை இந்தியாவே திரும்பி பார்த்து வாழ்த்துகிறது. பெண்ணை மையப்படுத்தும் அரசாட்சி நிலைக்கும். பெண்கள் வாழ்த்தும் ஆட்சியாக தமிழ்நாட்டு ஆட்சி இருக்கிறது. பைபிள் 2500 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா

வெறும் 58 மொழிகளில்தான் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு வரும் அயல்நாட்டு விருந்தினர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வழங்கும் நிலை வரவேண்டும். திருக்குறள் தெரியாமல் தமிழ்நாட்டில் அரசு வேலையில் யாரும் சேரமுடியாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் பூகோளத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர்.

விவேகானந்தர் சிலை நிற்பதுதான் குமரிமுனை என்றதை உயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை நிற்பதுதான் குமரி முனை என சொல்லவைத்து பூகோளத்தை மாற்றியவர் கலைஞர். இமயமலை வீழலாம், ஆனால் ஆயிரம் சுனாமி வந்தாலும் வானத்துக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு திருவள்ளுவர் சிலை நிற்கும். திருக்குறளுக்கு பலரும் உரை செய்திருக்கிறார்கள். நவீன உலகுத்துக்கு திருக்குறளுக்கு உரை எழுத நான் தீர்மானித்திருக்கிறேன்" என்றார்.

Doctor Vikatan: `பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை' - skin care என்பது பெண்களுக்கு மட்டும்தானா?

Doctor Vikatan: எனக்கு டீன் ஏஜில் மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள், அநியாயத்துக்கு அழகு விஷயத்தில் அக்கறை செலுத்துகிறாள். அவளுக்கு நேரெதிராக மகன், அதைக் கண்டுகொள்வதேஇல்லை. முகம் கழுவக்கூடசோம்பேறித்த... மேலும் பார்க்க

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்... மேலும் பார்க்க

``சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?'' - அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொ... மேலும் பார்க்க

``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'நாம் ஆண்ட பரம்பரை' என பேசியது சர்ச்சையான நிலையில், 'நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை' என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் மூர்த்திஅ... மேலும் பார்க்க

ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * எங்கள் பரம்பரை பரம்பரை..." - அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை! * மூதாதையர் மரபு - தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம். * திருந... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? - Fact Check

'என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?' என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, 'கொள்முதல் விலை அதிகமாக உள்ளது' என்று பொங்கல் தொகுப்ப... மேலும் பார்க்க