வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
தைப்பூசத்தை முன்னிட்டு, வைகை விரைவு ரயில் பிப்.11 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு இருமுடி கட்டி செல்லும் பக்தா்களின் வசதிக்காக மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில் டிச.28 முதல் பிப்.11 வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.08 மணிக்கு வரும் ரயில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.