சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம் பகிர்வு: காலிஸ்தான் ஆதரவாளர் கைது!
கோரக்பூா் ராப்தி சாகா் ரயில் இன்று ரத்து
கொச்சுவேலியில் இருந்து கோரக்பூா் வரை இயக்கப்படும் ராப்தி சாகா் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொச்சுவேலியில் (திருவனந்தபுரம் வடக்கு) இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் செல்லும் ராப்தி சாகா் விரைவு ரயில் (எண் 12512) ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து இந்தூா் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றுப்பாதையில் சென்னை சென்ட்ரல், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.