செய்திகள் :

பாமக பொதுக்குழு விவகாரம்: ராமதாஸை சந்திக்கிறார் அன்புமணி!

post image

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில் அன்புமணி, ராமதாஸை இன்று(டிச. 29) சந்திக்கிறார்.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமித்தது தொடர்பாக கூட்ட மேடையில் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்ததை அடுத்து மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இளைஞரணித் தலைவர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும் கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்தார்.

அப்போது அவரிடம் மைக்கை கேட்டு வாங்கிய அன்புமணி பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை இன்று(டிச. 29) சந்திக்கிறார்.

அறவழியில் மக்களைச் சந்தித்தவர்களை கைது செய்வதா? - விஜய் கண்டனம்!

தவெக கட்சியினர் கைதுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

'தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம்'

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் என தேசிய தகவல் மையம்(என்ஐசி) தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பால... மேலும் பார்க்க

குமரியில் கண்ணாடி பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

கன்னியாகுமரியில் திருள்ளுவர் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 30) திறந்து வைத்தார்.கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்ப... மேலும் பார்க்க

சக மாணவரைக் கொன்ற 13 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை!

சீனாவில் பணத்திற்காக சக மாணவரைக் கொன்ற 13 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவனது கூட்டாளியான மற்றொரு சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.ஹெய்பெய் மா... மேலும் பார்க்க

அதிமுகவினர் கைது: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக இன்று(டிச. 30) தமிழகம் முழு... மேலும் பார்க்க

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் சென்னை தி.நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க