செய்திகள் :

25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரி... தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டிரைவர்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். சொந்தமாக லாரி வைத்துள்ள சுரேஷ், அவரே அந்த லாரியை ஓட்டியும் வந்துள்ளார். இவர் கடந்த 16-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் இருந்து ரேசன் கடைகளுக்கு வினியோகிக்கப்படும் 25 டன் ரேசன் அரிசியை தனது லாரியில் ஏற்றி கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள அரசு குடோனுக்கு கொண்டு செல்வதற்காக வந்துள்ளார். மார்த்தாண்டம் வரை வந்த லாரி குறித்து அதன் பின்னர் என்ன ஆனது என தெரியவில்லை. ரேஷன் அரிசியுடன் பாதி வழியிலேயே மாயமான லாரி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுக்கடை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியுடன் சென்ற லாரியையும், லாரி டிரைவர் சுரேசையும் தேடி வந்தனர்.

crime

இந்த நிலையில் இன்று காலை நடைக்காவு அருகே வடக்கேதோப்பு பகுதியில் சிஜோ என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் உள்ளதாக கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த அந்த வீட்டின் மேல்தளத்தின் படிக்கட்டு கம்பியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் ஒருவர் நிற்பதை அங்கு வேலைக்கு வந்த தொழிலாளர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

கொல்லங்கோடு போலீசார் அங்குச் சென்று விசாரித்ததில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உள்ள நபர் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ் என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் போலீஸுக்கு பயந்து கட்டுமானபணிகள் நடைபெறும் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சுரேஷ்

ரேஷன் அரிசியுடன் மாயமான லாரி குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் லாரி ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திவிட்டு வேறு எவரேனும் சுரேசை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

10 ஆண்டுகளில் 31 கொலைகள்; பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

2015 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 24, 2024 வரை உலகம் முழுவதும் 757 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாவலர் குழு (Committee to Protect Journalists - CPJ) கூறியுள்ளது. CPJ அ... மேலும் பார்க்க

அந்தரங்கப் படங்களைக் காட்டி காதலிக்கு மிரட்டல்; விசாரணையில் வெளியான காதலனின் வெறிச்செயல்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அபினவ் (17) என்ற மாணவர் 11வது வகுப்பு படித்து வந்தார். அவனது வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் 12வது வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் இருக்கிறார். அவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

சென்னை : `கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிக் கொன்ற இளைஞருக்கு மரண தண்டனை' - மகளிர் சிறப்பு நீதிமன்றம்

இரண்டாண்டுகளுக்கு முன்பு, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்த இளைஞருக்குச் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இந்... மேலும் பார்க்க

சென்னை: மாணவனுக்குப் பாலியல் தொல்லை; தாயின் புகாரின் பேரில் ஓட்டுநரிடம் விசாரணை; நடந்தது என்ன?

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா (43). (பெயர் மாற்றம்) இவர், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கெடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``எனக்கு 18 வயதில் மகளும் 13 வயதில் மகனும் உள்ளனர். என்... மேலும் பார்க்க

UP: வகுப்பில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர்... சிரித்த மாணவர்களை ஆத்திரத்தில் தாக்கியதால் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர் குல்தீப் யாதவ், 8 வயது மாணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளி ஆசிரியர் குல்தீப் யாதவ் தனது மொபைல் போனில் ஆபா... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது: நாயை வைத்து பாடம்புகட்டிய மும்பைவாசி... வெறுத்துப்போன மோசடி கும்பல்

சமீபகாலமாக மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த முறைகேட்டில் ஏராளமான... மேலும் பார்க்க