இந்தியன் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர் வேலை!
சென்னை: மாணவனுக்குப் பாலியல் தொல்லை; தாயின் புகாரின் பேரில் ஓட்டுநரிடம் விசாரணை; நடந்தது என்ன?
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா (43). (பெயர் மாற்றம்) இவர், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கெடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``எனக்கு 18 வயதில் மகளும் 13 வயதில் மகனும் உள்ளனர். என்னுடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நான், வீட்டு வேலை செய்து வருகிறேன். என்னுடைய மகன், எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க என் மகனைக் கடைக்கு அனுப்புவது வழக்கம். சம்பவத்தன்று என்னுடைய மகன், பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், என்னுடைய மகனை அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பின்னர், என் மகனிடம் அவர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதனால் அழுதுகொண்டே என் மகன் வீட்டுக்கு வந்து என் மகளிடம் விவரத்தைக் கூறியிருக்கிறான். என் மகள் மூலம் இந்தத் தகவல் எனக்குத் தெரியவந்தது. எனவே என் மகனிடம் தவறாக நடந்துக்கொண்ட அந்த ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
அதன்பேரில் புளியந்தோப்பு காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மது போதையிலிருந்ததால் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப் புளியந்தோப்பு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...