வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
குடும்பமே முக்கியம்..! இலங்கை தொடரிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கம்மின்ஸ் மனைவி பெக்கிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் இலங்கை உடனான் தொடரில் தான் பங்கேற்பதில் சந்தேகம் எனக் கூறியுள்ளார்.
ஜன.29 முதல் பிப்.6ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இலங்கை செல்லவிருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கடைசி போட்டிகளாக இது இருக்கும். இந்தியாவுடனான கடைசி டெஸ்ட்டில் (சிட்னி டெஸ்ட்) ஆஸி. வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் பேசியதாவது:
சரியான தேதியை முடிவெடுப்பதில் சிரமம். ஆனால், நிச்சயமாக இலங்கை தொடரினை மிஸ் செய்வேன்.
வெற்றியைவிட மகிழ்ச்சி முக்கியம்
எனது அம்மா இறந்தபிறகு நான் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். குடும்பம்தான் மகிழ்ச்சிகரமானது. வாழ்க்கையில் சந்தோஷத்தை தேடுகிறேன். அது குடும்பமாக இருக்கிறது.
நான் விளையாடுவது பயணிப்பது என எல்லாவற்றையும் குடும்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கிறேன். அதுதான் மனதின் தேவையற்ற விஷயங்களை நீக்குவதற்கு உதவுகிறது.
விளையாட சென்றால் நன்றாக விளையாட வேண்டும். அங்கு நிச்சயமாக அழுத்தம் இருக்கும். ஆனால், குழ்ந்தையாக இருக்கும்போது ஒவ்வொரு முறையும் விளையாட செல்லும்போதும் அம்மா, அப்பா கூறியதென்னவென்றால் ’மகிழ்ச்சியை அனுபவி’ என்பதுதான்.
குடும்பத்துடன் அதிக நேரம்
உங்களது சிறந்த முயற்சியை அளிக்க வேண்டும். ஆனால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தான் நான் ஒவ்வொரு முறையும் விளையாட செல்லும்போது நினைத்துக்கொள்வேன்.
நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நிச்சயமாக வாய்ப்பு என்பது வீணாகும். கடந்த சில வருடமாக அதுதான் உண்மையாக இருந்து வருகிறது. நீங்கள் விளையாட செல்லும்போது குடும்பத்துக்கான நேரம் இழக்கப்படுகிறது.
அதனால் இந்த முடிவு வேண்டுமென்றே எடுக்கப்படுவதுதான். இருப்பினும் முடிந்தளவுக்கு அதிகமாக விளையாட முயற்சிக்க வேண்டும். அதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார்.
கடந்தமுறை ஆல்பியின் தொடக்க காலத்தில் என்னால் இருக்க முடியவில்லை. தற்போது, புதிய குழந்தையுடன் அதிகமான நேரம் செலவிட முயற்சிக்கிறேன் என்றார்.