15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
சென்னை மலர்க் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு!
சென்னை மலர்க் கண்காட்சியைக் காண்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் நான்காவது மலர் காட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜன. 2) தொடக்கி வைத்தார்.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.
சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: ரூ.5,000 வரவு வைக்கப்படும்.. பிரதமர் மோடி படத்துடன் மோசடி லிங்க்! மக்களே உஷார்!!
தற்போது, நான்காவது சென்னை மலர்க் காட்சி ஜனவரி 2025-இல் செம்மொழிப் பூங்காவில் நடைபெறுகிறது. இதில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வண்ணப் பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, ரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மலர்க் காட்சி ஜனவரி 2-ஆம் தேதியான இன்றையதினம் தொடங்கி 18.1.2025 வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும்.
மேலும் https://tnhorticulture.in/spetickets/ என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலர்க் கண்காட்சியைக் காண்பதற்கான கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ. 150-லிருந்து ரூ. 200-ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கேமராவுக்கு ரூ.500, விடியோ கேமராவுக்கு ரூ. 5000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.