செய்திகள் :

Volkswagen Taigun: `மும்பை டு மஹாபலேஷ்வர்' - ஃபோக்ஸ்வாகன் காரில் ஒரு டிரைவ்; டைகூன் ஓகேவா?

post image
ஃபோக்ஸ்வாகன் டைகூன். இது களமாடக்கூடிய இதே செக்மெண்டில் அளவில் இதைவிட பெரிய கார்கள் இருக்கின்றன. ஆனால் ஃபோக்ஸ்வாகன் டைகூனுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது.

ஒரு கார் கம்பீரமாக இருந்தால், க்யூட்டா இருக்காது. ஆனால் ஃபோக்ஸ்வாகன் டைகூனில் இந்த இரண்டு அம்சங்களுமே ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்கவில்லை

ஒரு டிரைவர்ஸ் காராக, ஓட்டுவதற்கு உற்சாகம் அளிக்கக்கூடிய காராக இருக்கும் அதே வேளையில் பயணிப்பதற்கு செளகரியமாகவும் ஃபோக்ஸ்வாகன் இருப்பதுதான் அதன் முக்கியமான சமாச்சாரம். சமரசம் இல்லாத இதன் ஜெர்மானியத் தரம், பாதுகாப்பு. இதையெல்லாம் தாண்டி குளோபல் NCAP -ல் ஐந்து நட்சத்திரம் ரேட்டிங் வாங்கிய கார் என்பது இதன் மற்றுமொரு சிறப்பு, ஏன்? அடையாளம் என்று கூடச் சொல்லலாம்.

Volkswagen

பாதுகாப்பு

(Passive Safety, Active Safety)

வருமுன் காப்பது பாசிவ் சேஃப்டி (Passive Safety) என்றால், ஆபத்து வரும்போது... மின்னல் வேகத்தில் உதவிக்கு வருவது ஆக்டிவ் சேஃப்டி (Active Safety). 6 காற்றுப்பைகள், கார் ஸ்கிட்டாகாமல் செல்ல உதவும் ECS (Electronic Stability Control), ட்ராக்‌ஷன் கன்ட்ரோல்(TCS), EBD (Electronic Brake Force Distribution) போன்றவற்றில் தொடங்கி ஹில் ஹோல்டு கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட், ரியர் கேமரா, குழந்தைகள் சீட்டுகளை ஃபிட் செய்யத் தே

வையான ISOFIX ஹூக்ஸ் என அனைத்தும் இதில் உண்டு என்பது இதன் பலம்.


பெர்ஃபாமன்ஸ்:

1. லிட்டர், 1.5 லிட்டர் என்று டைகூனில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸ் இருக்கிறது. அதேபோல மேனுவல், AT, DSG என்று மூன்று பாக்ஸ் ஆப்ஷன்ஸ் உண்டு. நாம் ஓட்டியது 115hp சக்தியையும் 178Nm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 1 லிட்டர் TSI இன்ஜின். மும்பையில் இருந்து 220 கிமீ தூரத்தில் இருக்கும் மஹாபலேஷ்வருக்கு இதில் பயணித்த அனுபவம் உற்சாகம் ஓட்டுவதாக இருந்தது. போக்குவரத்து  நெரிசல் மிகுந்த நகர்ப்புறச் சாலைகள், விமான ஓடுதளம் போல 22 கிமீ நீளத்திற்குக் கடல் மீது அமைந்திருக்கும் அட்டல் சேது பாலம், பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கொண்டை ஊசி வளைவுகள் என நாம் பயணித்த அனைத்துச் சாலைகளிலும் களைப்பில்லாமல் பயணிக்க இந்த இன்ஜின் துணை நின்றது.

இந்தச் சக்தி போதாது; மேலும் அதிக சக்தி வேண்டும் என்பவர்கள் 150hp சக்தியையும், 250Nm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட டைகூனைத் தேர்ந்தெடுக்கலாம்.  இதன் தனித்தன்மை என்னவென்றால், குபுக்கென்று பவரைக் கொப்பளித்துவிடாது. ஆனால், நாம் எந்த அளவு பவரைக் கேட்டாலும், கேட்கக் கேட்க அமுதசுரபி போல சீராக கொடுத்துக் கொண்டே இருக்கும். எத்தனை வேகமாகச் சென்றாலும், எவ்வளவு பலத்தோடு ஆக்ஸிலரேட்டர் பெடலை மிதி மிதி என்று மிதித்தாலும் சத்தமே இல்லாமல் வேலை செய்யும் இயல்பு கொண்டது இது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை:

எத்தனை கிமீ ஓட்டினாலும் சரி, இதில் சோர்வு தெரியவில்லை. அந்த அளவுக்கு ரிலாக்ஸ்டாக இதை ஓட்ட முடிகிறது. இதன் Power Assisted Electro-Mechanical Steering-ன் துல்லியம் , ஃபீட்பேக் என அனைத்தும் அற்புதமான இன்ஜினீயரிங். இதன் டர்னிங் ரேடியஸ் 5.05 மீட்டர்கள்தான் என்பதால் ஷார்ப்பான வளைவுகளில் எல்லாம்கூட சட்டெனத் திரும்ப முடிந்தது.

17 இன்ச் அலாய் வீல்  கொண்ட இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பது 188மிமி. அதனால் எத்தகைய குண்டு குழிகளிலும் தரை தட்டவே இல்லை. இதன் முன்பக்கச் சக்கரங்களுக்கு stabilizer bar உடன் கூடிய McPherson suspension கொடுக்கப்பட்டிருப்பதாலும், பின்பக்கச் சக்கரங்களுக்கு Twist beam axle கொடுத்திருப்பதாலும் குண்டு குழிகளில் ஏறி இறங்கினாலும் கேபினுக்குள் அதிர்வுகளே தெரியவில்லை.  

வெளிப்புறத் தோற்றம் மற்றும் உள்ளலங்காரம்:

ஒரு காரின் அழகுக்கு முக்கியமான அம்சம் அதன்  டிசைன்தான். இந்த டைகூனுக்கு அது தாராளமாகவே இருக்கிறது. இதன் ஹை ஸ்டான்ஸ், LED ஹெட்லாம்ப்ஸ் மற்றும் DRL ஆகியவற்றின் டிசைன், 3D ஸ்ட்ரிப் கிரில், இன்ஃப்னிட்டி LED டெயில் லாம்ப் ஆகிய அனைத்தும் இந்தக் காரின் கம்பீரத்தைக் கூட்டுகின்றன.

வெண்டிலேட்டட் டிரைவர் சீட், அனைத்துத் திருகுகளும் கைக்கு எட்டும் தூரத்தில்  இரட்டை வண்ணத்தில் அமைந்திருக்கும் டேஷ்போர்டு ,சரியான குஷன் அழுத்தத்தில் இருக்கும் சீட்கள் என எல்லாமே சேர்ந்து காருக்குள் ஒரு மினி உல்லாச உலகத்தையே காட்டுகின்றன. இத்தனை அம்சங்கள் ஒன்றாக இருந்தால் எப்படிக் களைப்பு வரும்? இன்னும் கொஞ்சம் போகலாமே? என்று ஆசைதானே வரும். அப்படித்தான் எங்களுக்கும் இருந்தது. 

சிறப்பு அம்சங்கள்:

ஆம்பியன்ட் லைட்டிங், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், 10 இன்ச் டச் ஸ்கிரீன், 8 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்ட்டர்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் இந்தக் காருக்குள் வித்தை காட்டுகின்றன.

இந்தக் காரின் கதவுகளைத் திறந்து மூடும்போது வரும் `தட்' என்ற ஒலியே இதன் பில்டு குவாலிட்டிக்கும் தரத்திற்கும் ஒரு சர்ட்டிஃபிகேட்தான்.

Mahindra: விமானக் கம்பெனியுடன் என்ன சண்டை? புது எலெக்ட்ரிக் காரோட பெயரை மாற்றிய மஹிந்திரா

மஹிந்திராவை ஒரு வகையில் கமல் என்று சொல்லலாம் போல! புது ரிலீஸ்களின் போது ஒவ்வொரு சர்ச்சைகளாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.கொஞ்ச நாட்களுக்கு முன்பு மிலிட்டரி கிரீன் கார்களை விற்கக் கூடாது; இது சட... மேலும் பார்க்க