15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
அசாமில் யானைகளின் எண்ணிக்கை 5,828 ஆக உயர்வு!
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2024 ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 5,828 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, இறுதியாக 2017ஆம் ஆண்டில் வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் 5,719 யானைகள் இருந்த நிலையில், 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2024 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தற்போது அசாமிலுள்ள யானைகளின் எண்ணிக்கை 5,828 ஆக உயர்ந்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
அசாம் மாநில வனத்துறையின் கணக்குப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு வெறும் 5,246 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2008 இல் 5,281 ஆகவும் 2011 ஆம் ஆண்டில் 5,620 ஆக உயர்ந்ததுள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிறையில் செல்போனுடன் பிடிப்பட்ட விசாரணைக் கைதி!
முன்னதாக, மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் மத்தியிலான பிரச்சனைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் பொதுமக்கள் அடங்கிய 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த 13 படைகளிலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆடைகள், டார்ச் லைட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.