15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
இந்தியன் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர் வேலை!
கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ENGINEER (CIVIL)
காலியிடம்: 3
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு:31.2.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ENGINEER (ELECTRICAL)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 31.2.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் விகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.