செய்திகள் :

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வேலை!

post image

மத்திய அரசின் நவரத்தின மதிப்பைப் பெற்ற பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவத்தின் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாடு முழுவதும் 467 கிடங்குகள் செயல்படுகிறது. இங்கு 10.3 மில்லியன் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய கிடங்குகள், தொழிற்சாலை சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு, சரக்கு பெட்டி நிலைய கிடங்குகள், உள்நாட்டு அனுமதிச் சீட்டு மற்றும் வான் சரக்கு கிடங்குகளின் சேவைகளும் அடங்கும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CWC/1-Manpower/DR/Rectt/2024/01

மொத்த காலியிடங்கள்: 179

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Management Trainee (General)

காலியிடங்கள்: 40

பணி: Management Trainee (Technical)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

பணி: Accountant

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

பணி: Superintendent (General)

காலியிடங்கள்: 22

பணி: Superintendent (General)- SRD (North-Eastern Region states)

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

பணி: Junior Technical Assistant (JTA)

காலியிடங்கள்: 81

பணி: Junior Technical Assistant (JTA) – SRD (North-Eastern Region states)

காலியிடங்கள்: 10

பணி: Junior Technical Assistant (JTA) – SRD (UT of Ladakh)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.29,000 - 93,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?எஸ்பிஐ வங்கியில் பிரொபேஷனரி அதிகாரி வேலை: காலியிடங்கள் 600!

வயதுவரம்பு: 12.1.2025 தேதியின்படி மேலாண்மை டிரெய்னி, இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு 28-க்குள்லும், கணக்காளர், கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர அனைத்து பிரிவினரும் ரூ.1350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.cwceportal.com/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).இந்த கல்வி வாரியம் தன்னுடன் இணைந்த... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ... மேலும் பார்க்க

இந்தியன் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர் வேலை!

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் பிரொபேஷனரி அதிகாரி வேலை: காலியிடங்கள் 600!

பாரத ஸ்டேட் வங்கியில் 600 தகுதிகாண் பருவ(பிரொபேஷனரி) அதிகாரியாக நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய பணியமர்த்தம் மற்றும் உயர்வுத் துறை கார்ப்பரேட் மையம் வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க

சாகா் மித்ரா திட்டத்தில் பணியாற்ற அழைப்பு

தூத்துக்குடி: சாகா் மித்ரா திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி, பழையகாயல் ஆகிய இரு மீனவக் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்... மேலும் பார்க்க