செய்திகள் :

வணங்கானிலிருந்து சூர்யா விலகியது ஏன்? பாலா விளக்கம்!

post image

நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் வணங்கான்?

இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதும் நடிகர் அருண் விஜய்காக சில மாற்றங்களைச் செய்தீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பாலா, “வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியின் சுற்றுலா தளங்களில் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியதால் சூர்யாவை காண பல ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால், படப்பிடிப்பை சரியாக நடத்த முடியவில்லை. பின், நானும் சூர்யாவும் ஆலோசித்துதான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் ஏதாவது தவறு செய்தால்கூட அதைக் கேட்கும் உரிமையை சூர்யாவுக்கு அதிகமாகவே வழங்கியிருக்கிறேன்” என்றார்.

மாலத்தீவுகளை வென்றது இந்தியா!

சா்வதேச நட்பு ரீதியிலான மகளிா் கால்பந்தாட்டத்தில் இந்திய அணி 14-0 கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை திங்கள்கிழமை திணறடித்து வென்றது.இந்திய தரப்பில், அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய லிண்டா கோம் சொ்டோ 4 ... மேலும் பார்க்க

விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 - புகைப்படங்கள்

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (மீனம்)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் ... மேலும் பார்க்க

மதம் மாறியது ஏன்? ரெஜினா விளக்கம்!

நடிகை ரெஜினா கேசண்ட்ரா தன் மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (கும்பம்)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எடுத்த காரியம் எவ்வளவு கடினம... மேலும் பார்க்க