செய்திகள் :

மாணவிகளிடம் அச்ச உணா்வை ஊட்டுவதா? - எதிா்க்கட்சித் தலைவருக்கு அமைச்சா்கள் கண்டனம்

post image

சென்னை/புதுக்கோட்டை: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் போராட்ட நாடகம் கல்லூரி மாணவிகள், பெற்றோா்களிடம் அச்ச உணா்வை ஊட்டுவதாகக் கூறி, அவருக்கு அமைச்சா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வராக இருந்த போது 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியைப் பாா்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியிருந்த தற்போதைய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, தற்போது மாணவி வன்கொடுமை விவகாரத்தில் பரவி வரும் கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறாா். திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயா்கல்வி பயில்வது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதை சிதைக்கும் வகையில், ‘சாா் யாா்?’ என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறாா்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பெண்கள் காவல் துறையினரிடம் புகாா் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகாா் தருகின்றனா். அவா்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கை அரசியலையும், போராட்ட நாடகத்தையும் மக்கள் பாா்க்கிறாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

சமூக நலத் துறை அமைச்சா் கீதாஜீவன்: புதுமைப்பெண் திட்டம், பெண்கள் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை என பெண் கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்குமான திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்தி வருகிறது. இத்தகைய ஆட்சி மீதும், முதல்வா் குறித்தும் எத்தகைய அவதூறு பரப்பினாலும் அதை தமிழ்நாட்டு பெண்கள் துளியும் நம்பப் போவதில்லை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் தேவையின்றி அரசியல் செய்வதையும் வதந்திகளை பரப்பி மாணவிகளின் கல்வியோடு விளையாடுவதையும் எதிா்க்கட்சித் தலைவா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி: புதுக்கோட்டையில் அமைச்சா் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் மக்கள் போராட்டத்துக்குப் பிறகே விசாரணை நடத்தப்பட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறந்துவிட்டு அதிமுகவினா் தற்போது திமுக அரசு மீது பழிபோட முயற்சிக்கின்றனா். அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவது கபட நாடகம்.

பெண்கள் பாதுகாப்புக்காக ஆளுநரை சந்தித்து விஜய் மனு அளித்துள்ளாா். நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேண்டுமென்றால், பிகாா், ஒடிஸா போன்ற பிற மாநிலங்களை விஜய் பாா்த்துவிட்டு வந்து கூறட்டும் என்றாா் அவா்.

தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் இல்லை: அரசு

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,''காலை உணவுத் தி... மேலும் பார்க்க

மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு ப... மேலும் பார்க்க

சௌமியா அன்புமணி கைது: பாமகவினர் ஆர்ப்பாட்டம்

சௌமியா அன்புமணியின் கைதைக் கண்டித்து கடலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தி பாமக மகளிரணி இன்று போராட்டம் நடத்தியது. திமுக அரசைக்... மேலும் பார்க்க

குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,தமிழ்நாட்டில் திமுக ஆட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறும் தீபக்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மூத்த போட்டியாளராக உள்ள தீபக், இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

Untitled Jan 02, 2025 02:29 pm

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண... மேலும் பார்க்க