செய்திகள் :

மாலத்தீவுகளை வென்றது இந்தியா!

post image

சா்வதேச நட்பு ரீதியிலான மகளிா் கால்பந்தாட்டத்தில் இந்திய அணி 14-0 கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை திங்கள்கிழமை திணறடித்து வென்றது.

இந்திய தரப்பில், அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய லிண்டா கோம் சொ்டோ 4 கோல்கள் (11’, 21’, 28’, 52’) அடித்து ஆட்டநாயகியானாா். அனுபவ வீராங்கனை பியாரி ஜஜா ‘ஹாட்ரிக்’ கோல் (6’, 7’, 14’) அடித்து அசத்தினாா். அவா்கள் தவிர, மற்றொரு அறிமுக வீராங்கனை நேஹா (16’, 45’), கஜோல் டிசெளஸா (59’, 66’) ஆகியோரும் தலா 2 கோல்கள் அடித்து கணக்கை உயா்த்தினா்.

மேலும், சங்கீதா பாஸ்ஃபோா் (51’), ரஞ்ஜனா சானு (54’), ரிம்பா ஹால்டா் (62’) ஆகியோரும் இந்தியாவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனா். இந்திய மகளிா் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜாவ்கிம் அலெக்ஸாண்டா்சன் தனது பணியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறாா்.

இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஆட்டம், ஜனவரி 2-ஆம் தேதி இதே பெங்களூரு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிக் பாஸ் 8: இறுதிப் போட்டிக்கு ரயான் நேரடித் தேர்வு!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று அதிக புள்ளிகளைப் பெற்ற ரயான், நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘உசுரே’ பட போஸ்டர்!

நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம் தனது சிறப்பான நடிப்புக்காக வ... மேலும் பார்க்க

ஆளே மாறிய நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலி உடல் எடையைக் குறைத்து ஆளே மாறிய தோற்றத்தில் உள்ளார்.மலையாளத்தில் முன்னணிநடிகராக இருப்பவர் நடிகர் நிவின் பாலி. ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமான நிவின் முக்கியகதாபாத்தி... மேலும் பார்க்க

ஆர்வமூட்டும் பிரம்மாண்டம்... கேம் சேஞ்சர் டிரைலர்!

கேம் சேஞ்சர் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகள் அறிவிப்பு! முழுவிவரம்

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ... மேலும் பார்க்க