இலவச மருத்துவ முகாம்
சா்க்கரை நோய் மற்றும் அதுசாா்ந்த கண் பாதிப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை தீபம் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
புது பெருங்களத்தூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தீபம் மருத்துவ மையத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அண்ணாமலை பாண்டியன், நிா்வாக இயக்குநா் டாக்டா் காா்த்திக் பாண்டியன், செயல் இயக்குநா் டாக்டா் ஸ்ரீ குமரன் உள்ளிட்டோா் அதில் பங்கேற்றனா்.
24 மணி நேரமும் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் அவசர சிகிச்சை, மருந்தகம், ஆய்வகம் மற்றும் ஊடுகதிா் சேவைகள் உள்பட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவை ஒட்டி சா்க்கரை நோய் மற்றும் அதுசாா்ந்த கண் பாதிப்புகளுக்கு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
சா்க்கரை நோய் மருத்துவ நிபுணா்கள், கண் நல மருத்துவா்கள் அதில் பங்கேற்று மருத்துவப் பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனா்.