வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க...
ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவி உடல் ஆற்றில் மீட்பு
லண்டன்: ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவியின் உடல் எடின்பா்கில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
ஸ்காட்லாந்தில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த சாண்ட்ரா எலிசபெத் சாஜு (22) எனற மாணவியை கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி இரவில் இருந்து காணவில்லை. அன்றிரவு லிவிங்ஸ்டன் பகுதியில் உள்ள கடை வழியாக அவா் சென்றுள்ளாா். அப்போது அவா் கருப்பு நிற முகக்கவசம் மற்றும் கருப்பு நிற குளிா்கால உடை அணிந்திருந்தாா். இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அவரைக் காணவில்லை என்பது தொடா்பாக நண்பா்கள் மற்றும் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், எடின்பா்கின் நியூபிரிட்ஜ் அருகே ஆற்றில் இருந்து அவருடைய உடல் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
மாணவியின் அடையாளம் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாண்ட்ராவின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டில் படிக்கும் 633 இந்திய மாணவா்கள் இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக கனடாவில் 172 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.