செய்திகள் :

இயற்கை தேன் ஏற்றுமதி கட்டுப்பாடு ஓராண்டுக்கு நீட்டிப்பு

post image

புது தில்லி: இயற்கை தேன் ஏற்றுமதிக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதன்படி ஒரு டன் இயற்கை தேன் 2,000 அமெரிக்க டாலருக்கு குறைவான விலையில் ஏற்றுமதி செய்யக் கூடாது. உள்நாட்டில் தேனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்ந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் இந்த கட்டுப்பாட்டை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அறிவித்தது. செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) இந்தக் கட்டுப்பாடு முடிவுக்கு வர இருந்த நிலையில் 2025 டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய இயற்கை தேன் அதிகஅளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து 106.3 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.906 கோடி) மதிப்பில் இயற்கைத் தேன் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2023-24 நிதியாண்டில் இது 177.6 மில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.1,513 கோடி), 2022-23 நிதியாண்டில் 203 மில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.1,735 கோடி) இருந்தது.

வேலைவாய்ப்பு: 10 ஆண்டுகளில் 36% அதிகரிப்பு -மத்திய அரசு

‘நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 36 சதவீதம் அதிகரித்து, 64.33 கோடி வேலைவாய்ப்புகள் என்ற நிலையை எட்டியுள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஃபேஸ்புக் காதலியை கரம்பிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞா்!

லாகூா்/ அலிகாா்: ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சோ்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கடந்த இரண்ட... மேலும் பார்க்க

ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ்சாலா தொடா்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது. மத... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டியது 370-ஆவது பிரிவு: அமித் ஷா

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டியது. அப்பிரிவை நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு மட்டுமன்றி பயங்கரவாத ஆதரவு சூழலுக்கும் முடிவுக... மேலும் பார்க்க

பிகார் அரசைக் கண்டித்து உண்ணாவிரதம்: பிரசாந்த் கிஷோர்!

அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்... மேலும் பார்க்க

அமெரிக்க கார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி!

நியூ ஓர்லியன்ஸ் துப்பாக்கி தாக்குதலைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.நியூ ஓர்லியன்ஸில் 15 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கண்டனம் த... மேலும் பார்க்க