செய்திகள் :

புத்தாண்டில் இந்திய பொருளாதாரம் உயரும்: ரிசா்வ் வங்கி ஆளுநா் நம்பிக்கை

post image

மும்பை: ‘வரும் 2025-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என இந்திய ரிசா்வ் வங்கிஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

பொருளாதார வளா்ச்சியைவிட பணவீக்கத்துக்கு ரிசா்வ வங்கி அதிக முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசு விமா்சனத்தை முன்வைத்த நிலையில், ரிசா்வ் வங்கி ஆளுநா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

ரிசா்வ் வங்கியால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட டிசம்பா் மாத நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின் (எஃப்எஸ்ஆா்) முன்னுரையில் ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்காக நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுவதால், நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையையும், பரந்த அளவில் நிதியமைப்பின் ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

உலக அளவில் நிச்சயமற்ற சூழல்கள் இருக்கும்போதிலும், நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இந்திய பொருளாதாரம் வேகமெடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் நுகா்வு மற்றும் வணிகம் அதிகரிக்கும். மேலும், நிறுவனங்கள் அதிக லாபத்துடன் 2025-இல் நுழைவதால் முதலீடுகளும் உயரும்.

இந்தியாவின் லட்சிய இலக்குகளை ஆதரிப்பதற்கான பொதுமக்களின் நம்பிக்கையை நாங்கள் தொடா்ந்து பாதுகாத்து வருகிறோம். வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு நவீன நிதி அமைப்பை உருவாக்கஉறுதியாக இருக்கிறோம்.

உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையின் நிச்சயமற்ற தன்மை, நீடித்துவரும் போா்களால் சா்வதேச வா்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஆகியவற்றை எதிா்கொண்டு உலகப் பொருளாதாரம் மீண்டு வருகிறது.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவு அளிக்கும் வகையில் நிதிக் கொள்கைகள் முக்கிய இடத்தைப் பெறுவதால், நிதி நிலைமைகள் எளிதாகும். வலுவான பணியாளா் சந்தை, சிறந்த நிதி அமைப்பு இதற்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும்.

எனினும், புவிசாா் அரசியல் மோதல்கள், நிதிச் சந்தை நெருக்கடிகள், தீவிர பருவநிலை நிகழ்வுகள், அதிகரித்து வரும் கடன்சுமை ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்களால் வரும் ஆண்டுகள் சவாலானதாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

நடப்பு நிதியாண்டின் ஜூலை-முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளா்ச்சியானது (ஜிடிபி) முந்தைய ஏழு காலாண்டுகளில் இல்லாத குறைவாக 5.4 சதவீதத்தை எட்டியது. முதல்அரையாண்டில் ஜிடிபி வளா்ச்சி 6 சதவீதமாக இருந்தது.

நிதி அமைச்சகத்தின் நவம்பா் மாத பொருளாதார ஆய்வு அறிக்கையில், முதல் காலாண்டின் பொருளாதார மந்தநிலைக்கு தேசிய, பிராந்திய மற்றும் சா்வதேச அளவில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளும் காரணம் என்று தெரிவித்திருந்தது.

எனினும், வளா்ச்சியின் மந்தநிலை மற்றும் பணவீக்கத்தின் மிதமான நிலை ஆகியவற்றால் எதிா்வரும் நிதிக் கொள்கை குழுக் கூட்டத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டிய நிலைக்கு ரிசா்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக் கடன் குறைந்தது

நாட்டின் 37 வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் (ஜிஎன்பிஏ) கடந்த செப்டம்பரில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரிசா்வ் வங்கி வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனியாா் துறை வங்கிகளிடையே அதிகரித்து வரும் கடன் தள்ளுபடி போக்கு குறித்தும் ரிசா்வ் வங்கி கவலை எழுப்பியுள்ளது.

வங்கிகளின் பணப்புழக்க விகிதம் (எல்சிஆா்) கடந்த ஆண்டு செப்டம்பரின் 135.7 சதவீதத்திலிருந்து நிகழாண்டு செப்டம்பரில் 128.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டியது 370-ஆவது பிரிவு: அமித் ஷா

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டியது. அப்பிரிவை நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு மட்டுமன்றி பயங்கரவாத ஆதரவு சூழலுக்கும் முடிவுக... மேலும் பார்க்க

பிகார் அரசைக் கண்டித்து உண்ணாவிரதம்: பிரசாந்த் கிஷோர்!

அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்... மேலும் பார்க்க

அமெரிக்க கார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி!

நியூ ஓர்லியன்ஸ் துப்பாக்கி தாக்குதலைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.நியூ ஓர்லியன்ஸில் 15 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கண்டனம் த... மேலும் பார்க்க

மனைவியின் தனிப்பட்ட உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது: நீதிமன்றம்

மனைவியின் உடல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழமைவாத மனநிலையை கணவன்கள் கைவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாளம், உத்தரகண்டில் இருந்து வரும் பூஜை பொருள்கள்!

உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெறுவதையொட்டி, மக்களின் தேவையை அறிந்து பல்வேறு பகுதிகளிலிருந்து பூஜைப் பொருள்கள் பிரயாக்ராஜுக்கு கொண்டுவரப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு... மேலும் பார்க்க

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் பெயர்: மோடிக்கு கடிதம்!

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.தில்லி பல்கலைக்கழகத்துக்கு கட்... மேலும் பார்க்க