செய்திகள் :

முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்!

post image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: “தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன்!

தென்னாப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

90 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதன் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அய்டன் மார்க்ரம் 89 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் அதிகபட்சமாக 93 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும்.

பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஷத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அமர் ஜமால் 2 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் மற்றும் சைம் ஆயுப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸ் - 88/3

தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. சைம் ஆயுப் 27 ரன்கள் எடுத்தும், கேப்டன் ஷான் மசூத் 28 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த கம்ரான் குலாம் இரண்டாவது இன்னிங்ஸ்களில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ஃபார்மில் இல்லாத வீரர்களை நீக்குங்கள்! - முன்னாள் இந்திய கேப்டன்

பாபர் அசாம் 16 ரன்களுடனும், சௌத் ஷகீல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 2 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா பாணியில் கொண்டாடிய நிதீஷ் குமார் ரெட்டி!

இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது அரைசதத்தினை புஷ்பா பட பாணியில் கொண்டாடியது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3ஆம் நா... மேலும் பார்க்க

நிதீஷ் சதம், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்: ஃபாலோ-ஆனை தவிர்த்த ஆல்-ரவுண்டர்கள்!

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.நிதீஷ் குமார் ரெட்டி 176 பந்துகளில் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தி... மேலும் பார்க்க

இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த நிதீஷ் குமார்..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய வீரர் நிதீஷ்குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள... மேலும் பார்க்க

முட்டாள்தனமான ஷாட்..! ரிஷப் பந்த்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் இந்திய வீரர் முட்டாள்தனமான ஷாட் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர... மேலும் பார்க்க

தீப்தி சா்மா அசத்தலில் இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி! ஒருநாள் தொடரில் மே.தீவுகள் ‘ஒயிட்வாஷ்’

வதோதரா: மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்... மேலும் பார்க்க

ஸ்மித் சதம்! ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்

மெல்போா்ன்: இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.சதம் கடந்த ஸ்டீவ் ஸ்மித்தின் சிறப்பான இன்னிங்ஸும், அவருக்குத் துணை நின்ற கேப்டன் ... மேலும் பார்க்க