48 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்
முட்டாள்தனமான ஷாட்..! ரிஷப் பந்த்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் இந்திய வீரர் முட்டாள்தனமான ஷாட் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் மோசமான முறையில் ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடர் முழுவதும் சுமாரான பேட்டிங்கை கொடுத்துவரும் ரிஷப் பந்த் மீது விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்பட்டு வருகின்றன.
போலாண்ட் வீசிய ஓவரில் ஒரேமாதிரி ஷாட் அடிக்க முயற்சித்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வர்ணனையின்போது கூறியதாவது:
முட்டாள், முட்டாள், முட்டாள். உனக்காகவே அங்கு 2 ஃபீல்டிங் வைத்திருக்கும்போதும் நீ அந்த ஷாட்டுக்கு போகிறாய். இதற்கு முந்தைய ஷாட்டில் அடிக்கமுடியாமல் இருந்தாய். இப்போது எங்கு ஆட்டமிழந்திருக்கிறாய் பார்த்தாயா? இது உனது விக்கெட்டை தூக்கி எறிவதற்கு சமம். இந்தியாவின் சூழ்நிலைக்கு இது தேவையில்லை.
சூழ்நிலையை புரிந்து ஆட வேண்டும். இதுதான் உனது இயல்பான் ஆட்டம் எனக் கூறக்கூடாது. என்னை மன்னிக்கவும் இது உங்களது இயல்பான் ஆட்டம் கிடையாது. அது ஒரு முட்டாள்தனமான ஷாட். இது உங்களது அணியை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும்.
அவர் இந்திய அணியின் ஓய்வறைக்கு செல்லக்கூடாது. வேறு ஓய்வறைக்கு செல்லட்டும் என்றார்.