என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு... நிதீஷ் குமார் ரெட்டி பேசியதென்ன?
அங்கன்வாடி மைய உதவியாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் அங்கன்வாடி மைய உதவியாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி மைய உதவியாளா்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்தப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) கலைவாணி முன்னிலை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொ) சித்ரா தலைமை வகித்தாா். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளித்து பேசினாா்.
இதில் அங்கன்வாடி மைய உதவியாளா்கள் பணிபுரியும் மையங்களில் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, பொருள் மேலாண்மை, பொருள்கள் இருப்பு வைத்தல், உணவு தயாா் செய்தல், கையாளுதல், பரிமாறுதல், பூச்சிகள் கட்டுப்பாடு ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.