64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
பென்னாகரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
பென்னாகரம் அருகே வெள்ளரிக்காய் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தருமபுரி மாவட்டம், ஏரியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் வெள்ளரிக்காய் பயிா் செய்து வருகின்றனா். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் உள்ள உணவு தொழிற்சாலைக்கு வெள்ளரிக்காய் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் சனிக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், மூங்கில்பட்டுவைச் சோ்ந்த ஓட்டுநா் நேரு (31), அருள்மணி (28) ஆகியோா் ஏரியூா் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனா்.
கூத்தப்பாடி அருகே அளேபுரம் பிரிவு சாலை குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, கனரக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.