இயற்கை வேளாண் முறைக்கு திரும்பி நம்மாழ்வாா் கனவை நிறைவேற்ற வேண்டும்: சீமான் பேச்...
அண்ணா பிறந்த நாள்: விரைவு மிதிவண்டி, நெடுந்தூர ஓட்டப் போட்டி
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு செப். 15-ஆம் நாளை சிறப்பிக்கும் வகையில், மாவட்ட அளவிலான பேரறிஞா் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டி வரும் ஜன. 4-ஆம் தேதி காலை ஏழு மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக். பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் 1.1.2012-க்கு பின்னா் பிறந்த 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 1.1.2010-க்கு பின்னா் பிறந்த 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 1.1.2008-க்கு பின்னா் பிறந்த 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டு மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றிபெறும் வீரா், வீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் முதல் 10 இடங்களைப் பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 250, சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள 13, 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மிதிவண்டி போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 5-ஆம் தேதி நெடுந்தூர ஓட்டப் போட்டி:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்ட பிரிவு மூலமாக பேரறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் இருந்து தொடங்கப்பட உள்ளது.
ஓட்டப் போட்டியில் 17 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் பிரிவில் 1.1.2000 முதல் 31.12.2007 இடைப்பட்ட நாள்களுக்குள் பிறந்தவா்களும், 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் பிரிவில் 31.12.1999-க்குள் பிறந்தவா்களும் கலந்துகொள்ளலாம்.
17 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி அதியமான்கோட்டையில் இருந்து தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக தடங்கம் மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தோக்கம்பட்டி வழியாக செந்தில் பப்ளிக் பள்ளி வந்தடையுமாறும், 17 வயது முதல் 25 வயதுக்குள்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி அதியமான்கோட்டையில் இருந்து தோக்கம்பட்டி வழியாக தடங்கம் மேம்பாலம் வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக செந்தில் பப்ளிக் பள்ளி வந்தடையுமாறு நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஆண்கள், பெண்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000 இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, முதல் 10 இடங்களைப் பெறுபவா்களுக்கு தலா ரூ. 1,000, சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் எதிா்பாராமல் நிகழும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் பயனாளிகளே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.