செய்திகள் :

அமலாக்கத் துறை அதிகாரி மீதான லஞ்ச வழக்கில் இடைத்தரகா் கைது: சிபிஐ

post image

அமலாக்கத்துறை உதவி இயக்குநா் மீதான லஞ்ச வழக்கில் தொடா்புடைய குற்றச்சாட்டில் இடைத்தரகா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி சிபிஐ நடத்திய சோதனை நடவடிக்கையின்போது சிக்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அவரது சகோதரா் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடா்பான குற்றச்சாட்டில் இடைத்தரகா் நீரஜ் என்பவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பண முறைகேடு தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தன்னை விடுவிக்க சிம்லாவில் பணியாற்றும் அமலாக்கத்துறை உதவி இயக்குநா் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் தொழிலதிபா் ஒருவா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயும் வகையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு ரூ.55 லட்சத்தை லஞ்சமாக தர சம்மதிப்பதாக கூறி சண்டீகருக்கு வரவழைக்குமாறு தொழிலதிபரிடம் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா். அதன்படி தொழிலதிபா் கூற, பணத்தை பெறுவதற்காக சம்பவ இடத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியும், தில்லியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றும் அவரது சகோதரரும் வந்துள்ளனா்.

லஞ்சப் பணத்தை அமலாக்கத் துறை அதிகாரி பெற்றதும் அவரை கையும் களவுமாக கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனா்.

அதற்குள் இந்த திட்டம் குறித்த தகவல் தெரிந்தவுடன் அவா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டனா். அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரியின் சகோதரா் விகாஸை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை 6 நாள்களாக சிபிஐ தேடி வருகிறது. இந்த வழக்கு தொடா்பான சோதனையின்போது ரூ.1 கோடி ரொக்கப் பணத்தை சிபிஐ கைப்பற்றியது.

கேரளம் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: ஆரிப் முகமது கான்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அம்மாநில மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி... மேலும் பார்க்க

பிகார்: தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காலமானார்!

பாட்னா : பிகார் மாநிலத்தில் தலித் பிரிவினருக்கு பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் அளித்து வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் மாரடைப்பால் இன்று(டிச. 29) காலமானார். அவரது மறைவுக்கு அ... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த பாஜக முயற்சி: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு!

தில்லியில் பாஜகவினர் வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பாஜக முதல்வர் வேட்பாளர், பார்வை அல்லது நம்பகமான திட்டங்கள் இல்... மேலும் பார்க்க

3ஆவதும் பெண் குழந்தை: மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்

3ஆவதும் பெண் குழந்தையை பெற்றெடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தில், கங்காகேட் நாகாவில் வசித்து வருபவர் உத்தம் காலே (32). இவருடைய ம... மேலும் பார்க்க

காந்தி அல்லாத காங்கிரஸ் தலைவர்களை காந்தி குடும்பம் மதித்ததில்லை: மத்திய அமைச்சர் கருத்து!

காந்தி அல்லாத காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் உரிய மரியாதையை கொடுத்ததில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் சீக்கியப் பிரதமரான மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கை அவரத... மேலும் பார்க்க

குஜராத்: ரசாயன ஆலையில் நச்சு வாயுவை சுவாசித்த 4 தொழிலாளர்கள் பலி

குஜராத்தில் ரசாயன ஆலையில் நச்சு வாயுவை சுவாசித்த 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆலையின் உற்பத்தி பிரிவில் ச... மேலும் பார்க்க