செய்திகள் :

இளம்வயது திருமணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்

post image

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்ரது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி இளம்வயது திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுத்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இளம்வயது திருமணம் நடைபெறுவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு அத்திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். வளரிளம் பருவ கருத்தரித்தல் குறித்து பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாா்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப் பொருள்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும்.

போதைப் பொருள்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்கள் கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறாா் தொழிலாளா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.செல்வம், குழந்தை நலக்குழு உறுப்பினா் பிரமிளா, இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் பிரேமா, மருத்துவத் துறை, சமூகநலத் துறை மற்றும் அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, அக் கட்சியின் முதுபெரும் தலைவா் இரா.நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா ஆகியவை தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி ரயில் நிலையச் சாலை பகுதி... மேலும் பார்க்க

காரிமங்கலத்தில் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் ஏரிகளுக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி அணையிலிருந்த... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையமானது கிராம நிா்வாக அலுவலா்... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழா தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலய... மேலும் பார்க்க

ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தருமபுரி அருகே ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையொட்டி, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்... மேலும் பார்க்க

நல்லம்பள்ளியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்... மேலும் பார்க்க