செய்திகள் :

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

post image

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார். அவருக்கு வயது 94.

லிம்போமா என்னும் ஒருவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிச. 25ஆம் தேதி உயிர் பிரிந்ததாக, ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இன்று (டிச. 27) தெரிவித்துள்ளது.

ஒசாமு சுசூகியின் தலைமையின் கீழ், அந்நிறுவனம் உலக சந்தையில் விரிவடைந்தது. சுசூகி நிறுவனம் குறிப்பாக மினி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பெயர் பெற்றது.

1982 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்துடன் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கிய சுசூகி, மாருதி உத்யோக்கை உருவாக்கினார்.

இந்த நிறுவனம், மாருதி 800 என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது. அக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, இந்த வகை கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், சுசூகிக்கு வலுவான நிலையை அடைந்தது.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சுசூகி நிறுவனம் பிரபலமடைய ஒசாமு காரணமாக இருந்தார்.

சுசூகி நிறுவனத்தில் அதிக ஆண்டுகளுக்கு தலைவராக இருந்த ஒசாமு, தனது நிறுவனத்தின் சிறிய ரக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு உலகம் முழுவதும் பெரும் சந்தையை உருவாக்கினார்.

1930 ஜனவரி 30 ஆம் தேதி ஜப்பானின் ஜெரோவில் பிறந்த ஒசாமு, வங்கியாளராகப் பணிபுரிந்தார். 1958 ஆம் ஆண்டு சுசூகி குடும்பத்தின் மகள் ஷோகோ சுசூகியை மணந்தார். இதனால் சுசூகி என்ற குடும்பப் பெயரைப் பெற்றார். அதே ஆண்டில் சுசுகி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

மன்மோகனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் செய்வது சரியல்ல: மாயாவதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான அரசியலுக்குப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், நாட்டின் ம... மேலும் பார்க்க

விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. ... மேலும் பார்க்க

ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் ச... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க