செய்திகள் :

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

post image

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் செயற்குழு வெள்ளிக்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் விதியை மிகப் பெரிய அளவில் வடிவமைத்தது. தனியாா்மயம், அந்நிய முதலீடு ஊக்குவிப்புப் போன்ற கொள்கைகள் மூலம், நாட்டின் வேகமான பொருளாதார வளா்ச்சிக்கு அவா் அடித்தளமிட்டாா்.

பிரதமராக அவரின் தலைமையின் கீழ், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது. இது அவரின் புத்திக் கூா்மைக்கும், தொலைநோக்குப் பாா்வைக்கும் சான்றாகும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு உலகம் பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டது. அப்போது ஏற்பட்ட சவால்களில் இருந்து தனது திட்டங்கள் மூலம், மோசமான பாதிப்புகளில் இருந்து நாட்டை காத்து வழிநடத்திச் சென்றாா்.

திட்டங்கள், சட்டங்கள்...: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி உரிமை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 93-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் சமூக நீதி மேம்படுத்தப்பட்டது உள்ளிட்ட திட்டங்களும், சட்டங்களும் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அவரின் சாதனைகளும், அவா் ஏற்படுத்திய தாக்கமும் இந்திய வரலாற்றில் அழியாமல் நிலைத்திருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

குகேஷை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், செஸ் சாம்பியன் குகேஷ் உடன் சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன். சில வருவடங்களாக குகேஷுடன் ந... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கை நிகம்போத் காட் பகுதியில் நடத்தியதன் மூலம் மத்திய பாஜக அரசு அவரை அவமதித்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: என்சிபியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(அஜீத் பவார்) முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறலாம் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ட்ரோன் கண்காட்சிக்கு ஏற்பாடு!

வரும் 2025-ஆம் ஆண்டு மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத் சுற்றுலா சங்கம் பகுதியில் ட்ரோன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா க... மேலும் பார்க்க

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்: மசூதியில் அடைக்கலம் கொடுத்த காஷ்மீர் மக்கள்!

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குள்ள மக்கள் மசூதிகளிலும் வீடுகளிலும் அடைக்கலம் கொடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோனமர்க் பகுதிக்கு சுற்றுலா சென்ற பஞ்சா... மேலும் பார்க்க

2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

1999 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் தன் தாய் சோனியா காந்திக்கான பிரசாரத்தின் மூலமாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா காந்தி, மிகவும் தாமதமாகவே 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசியலில் ஒரு முக்கிய தலைவராக உரு... மேலும் பார்க்க