செய்திகள் :

Manu Bhaker : `அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்; இந்த விஷயத்தை...' - கேல் ரத்னா குறித்து மனு பக்கர்

post image

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியானது. அதில், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மற்றும் டிராக்-ஃப்ளிக்கர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்கள் வென்ற மனு பக்கரின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

மனு பக்கர்

அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் தலைமையில், முன்னாள் மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் இடம்பெற்ற 12 பேர் கொண்ட விருதுகள் குழுவினரும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டன. இதற்கிடையில், அமைச்சக அதிகாரி ஒருவர், ``இது இறுதிப்பட்டியல் அல்ல, இன்னும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். மனு பக்கரின் பெயர் இதில் சேர்க்கப்படலாம்" என விளக்களித்தார்.

கடந்த திங்களன்று, துப்பாக்கி சுடும் கூட்டமைப்பு (NRAI) விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதிக்கு 'மனு பக்கரை கேல் ரத்னா விருதுக்கு அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியது. இது தொடர்பாக NRAI தலைவர் கலிகேஷ் சிங் தியோ, ``மனு பக்கர் விருதுக்கு விண்ணப்பித்தாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் விண்ணப்பித்திருந்தால், அவரை நிராகரிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் விண்ணப்பிக்கவில்லை என்றால், விருதுக் குழுவால் எதுவும் செய்ய முடியாது. அமைச்சகம் எங்கள் கருத்தைப் புரிந்துகொண்டு அவருக்கு மிகவும் தகுதியான விருதை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.

மனு பக்கர்

இது தொடர்பாக தன் நீண்ட மௌனத்தை கலைத்திருக்கும் மனு பக்கர், ``மிக மதிப்புமிக்க கேல் ரத்னா விருதுக்காக என்னைப் பரிந்துரைக்கவில்லை என்ற தற்போதைய சிக்கலைக் குறித்துப் பேசுவதானால், ஒரு தடகள வீரராக, எனது நாட்டிற்காக விளையாடுவதும் செயல்படுவதும்தான் எனது பங்கு. விருதுகளும் அங்கீகாரமும் என்னை உந்துதலாக வைத்திருக்கிறதுதான். ஆனால் என் குறிக்கோள் விருதுகளல்ல. விருதுக்கான மனுத்தாக்கல் செய்ததில் என் தரப்பில் தவறு நடந்திருக்கலாம்... விருதைப் பொருட்படுத்தாமல், எனது நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தயவுசெய்து இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Aus v Ind : 'ஐசிசி யை விட பிசிசிஐதான் அதிகாரமிக்கது' - ஆஸி வீரர்கள் ஓப்பன் டாக்!

பார்டர் கவாஸ்கர் தொடர் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், 'ABC Sports' என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஐ.சி.சியை விட பிசிசிஐதான் அதிக அதிகாரம் மிக்கதென கூறி... மேலும் பார்க்க

Ashwin: "அஷ்வினை விட சிறந்த ஆல்ரவுண்டர் கிடைப்பார்; அதற்கு..." - ஜடேஜா சொல்வதென்ன?

இந்திய அணியின் முக்கிய வீரரான அஷ்வின் பிரிஸ்பேன் டெஸ்ட்டோடு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் சக வீரரான ஜடேஜா, "அஷ்வின் விட்டுச் சென்றி... மேலும் பார்க்க

``தடைகளை உடைத்து சாதிக்க முடியும்..'' - சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறன் மாணவி

விழுப்புரம் அரசுப்பள்ளி மாணவி சுபஸ்ரீசர்வதேச காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான தடகளப் போட்டியில், தமிழக மாணவி சுபஸ்ரீ பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள... மேலும் பார்க்க

``5 பதக்கங்கள் வென்றவருக்கு வெறும் வாழ்த்து மட்டும் தானா?'' - கொதிக்கும் விளையாட்டு ஆர்வலர்கள்

பத்தாவது ஆசிய-பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள் மலேசியாவில் டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 12 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மொத்தம் 24 பத... மேலும் பார்க்க

``கிரவுண்ட் இருந்தா நிறைய சாதிப்போம்!" -மாநில கால்பந்து கோப்பை வென்ற அரசுப் பள்ளி மாணவிகள் கோரிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமீபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட 40-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில், 40 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியில், த... மேலும் பார்க்க