ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்த...
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!
பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார்.
அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த வாசுதேவன் நாயர், பத்ம பூஷண் விருது, இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, கேரள அரசின் கேரள சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, வள்ளலார் விருது, எழுத்தச்சன் விருது, மாத்ருபூமி இலக்கிய விருது, ஓ.என்.வி. இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.