செய்திகள் :

சென்னை, புறநகரில் இன்றும் நாளையும் மழை பெய்யும்!

post image

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு

இந்த நிலையில், பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிசம்பர் 26 மற்றும் 27ஆம் தேதி மழை பெய்யும்.

சென்னையில் கிறிஸ்துமஸ் அன்று மிக அரிதாக கடந்த 25 ஆண்டுகளில் 2001, 2003, 2022 மற்றும் இந்தாண்டு 2024 ஆகிய 4 முறை மட்டுமே மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும். வட கடலோரப் பகுதிகளான புதுவை, கடலூர், விழுப்புரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

மழையை ரசியுங்கள். கடைசி சில மழை, அடுத்த 6 மாதங்கள் மழைக்காக ஏங்குவோம். தாமதமான பருவமழையை அனுபவியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை: ஞானசேகரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனுடன் தொடர்புடைய மற்றொரு நபரைக் காவல் ... மேலும் பார்க்க

யாரைக் காக்க முயற்சிக்கிறது திமுக அரசு? இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் யாரைக் காக்க முயற்சிக்கிறது திமுக அரசு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து ... மேலும் பார்க்க

காந்தியடிகள்கூட இப்படி போராடமாட்டார்! அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை!! - திருமா

காந்தியடிகள்கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்ததில்லை என அண்ணாமலை போராட்டம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் செய்தியாளர்க... மேலும் பார்க்க

சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம்: அண்ணாமலை

திமுக அரசைக் கண்டித்து நாளை (டிச. 27) சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு எதிராக நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே 6 முற... மேலும் பார்க்க

சுனாமி நினைவு நாள்: வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை!

சுனாமி 20 ஆம் ஆண்டு நினைவு தினம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் இன்று(டிச.26) அனுசரிக்கப்பட்டது. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்... மேலும் பார்க்க