சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம்: அண்ணாமலை
திமுக அரசைக் கண்டித்து நாளை (டிச. 27) சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்; மேலும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் இனி போராட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டார்.