தூத்துக்குடியில் எஸ்.எஸ்.ஐ-யின் பைக் திருட்டு
தூத்துக்குடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் பைக்கை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தெற்கு காட்டன் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றாராம். மீண்டும் வந்த போது, பைக் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பைக்கை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.