Manmohan Singh: `என் மகனின் கல்விச் செலவுக்கு உதவ முன்வந்தார்’ - நெகிழ்ந்த மலேசி...
Manmohan Singh: `9 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு கேட்ட கேள்வி' -மெய்சிலிர்த்த மருத்துவர் பகிர்வு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த காலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
10 முதல் 11 மணிநேரம் நீண்ட அந்த சிகிச்சைக்குப் பிறகு முதலில் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டது அவரது உடல் நலனைப் பற்றி அல்ல, அவரது நாட்டைப் பற்றி.
மன்மோகன் சிங்குக்கு சிகிச்சை அளித்த மூத்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராம்கந்த் பாண்டா என்.டி.டி.வி தளத்திடம் அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற சிகிச்சைக் குறித்து ராம்கந்த் பாண்டா பேசியதாவது, "நாங்கள் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பிறகு, இரவில் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்தோம். அப்போதுதான் அவரால் பேச முடிந்தது. "நாடு எப்படி இருக்கிறது, காஷ்மீர் எப்படி இருக்கிறது" என்பதுதான் அவர் கேட்ட முதல் கேள்விகள். அப்போது நான் நீங்கள் சிகிச்சை பற்றி எதுவும் கேட்கவில்லையே என அவரிடம் கேட்டேன். அதற்கு டாக்டர் சிங் (Manmohan Singh) நான் என் வேலையை சிறப்பாக செய்துவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும் என்றார்"
2008-09 காலகட்டத்தில் காஷ்மீரில் கடுமையான கலவரங்கள் நடந்தன. காஷ்மீரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்திருந்த காலகட்டம். காஷ்மீரில் தேர்தல் முடிந்திருந்தது, பாகிஸ்தானுடன் மோதல் ஏற்படுவதற்கான சூழலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மன்மோகன் சிங், "அதனால் நான் என் அறுவை சிகிச்சையைப் பற்றி கவலைப்படவில்லை, என் நாட்டைப்பற்றி கவலைப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் குறித்து மருத்துவர் ராம்கந்த் பாண்டா, "அவர் சிறந்த மனிதராக இருந்தார், அடக்கமான நபர், தேசபக்தி மிக்கவர்" என்றார்.
மேலும், "இதுபோன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நெஞ்சு வலிப்பதாகக் கூறுவார்கள், ஆனால் மன்மோகன் சிங் அப்படி எதுவும் கூறவில்லை. சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வொருமுறை அவர் மருத்துவமனைக்கு செக்அப்-காக வரும்போதும் நாங்கள் கதவுக்கு சென்று அவரை வரவேற்போம், அவர் ஒவ்வொருமுறையும் எங்களை அங்கு வர வேண்டியதில்லை என்பார்." என்றார் மருத்துவர்.
"தனிப்பட்ட மனிதராக அவர் மிகுந்த நேர்மையானவர். மிகவும் நிலையானவர், ஒன்றை செய்வேன் என சொல்லிவிட்டால் அதைச் செய்து முடிப்பார். யாரும் அவரது மனதை மாற்ற முடியாது." என்றார் ராம்கந்த்.