செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை: ``யார் அந்த சார்னு தெரியணும்.." - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

post image

அண்ணா பல்கலைக் கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரிப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணமலை சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், ஆளும் தரப்பும், காவல்துறையும் உரிய விசாரணை நடந்துவருவதாகவும், குற்றவாளிக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எளிமையானவர், பொருளாதார நிபுணர். அவர் நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவை பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர். 10 ஆண்டுகாலம் இந்திய நாட்டின் பிரதமாராக இருந்து ஆட்சி புரிந்தவர். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், காங்கிரஸை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவம் என்றால் அது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்தான்.

அந்த மாணவியை மிரட்டிய ஞானசேகர் என்பவர் அப்போது செல்போனில் 'சார்.. சார்...' எனப் பேசியதாக மாணவி குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த சார் என்பதை இப்போதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால், காவல்துறை, இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒருவர்தான் எனக் கூறியிருக்கிறது. அந்த மாணவி குறிப்பிட்ட அந்த சார் யார் என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. அதை மறைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் கல்லூரிக்குள் ஒருவர் எப்படி அடிக்கடி சென்று வரமுடியும்.

70 சிசிடிவி கேமராவில் 56 சிசிடிவி கேமராதான் இயங்குவதாக கூறப்படுகிறது. அப்படியானால் மற்றவை ஏன் இயங்கவில்லை. கைது செய்யப்பட்ட ஞானசேகர் சரித்திரப் பதிவேடு இருக்கும் குற்றவாளி. ஒரு குற்றவாளி எப்படி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் அடிக்கடி சென்றுவர முடியும். ஞானசேகரனை 24-ம் தேதி விசாரித்தவுடன் அவரை வெளியே விடுகிறார்கள். இது எப்படி சரியான நடவடிக்கை? காவல்துறை அதிகாரி 100-க்கு புகார் வந்தவுடன் புகார் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் அமைச்சர் மாணவி நேரில் புகார் அளித்தவுடன் புகார் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். இந்த முரண்பட்ட தகவலால்தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது.

எனவே இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைச்சர்களுடன், தி.மு.க-வுடன் நெருக்கமானவர் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிறது. அண்ணா நகரில் சிறுமிக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்கிறது. இதை எதிர்த்து ஆளும் அரசு உச்ச நீதிமன்றம் சென்று மேல் முறையீடு செய்கிறது. பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறது என்பது வெட்கக்கேடு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் செவிலியரின் அந்தரங்கப் புகைப்படத்தைக் காட்டி 10 லட்சம் ரூபாய் கேட்டதாக ஒருவர் மீது புகார் அளிக்கப்படுகிறது. அவர் தி.மு.க நிர்வாகி என பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழக விவகாரத்தில் புகார் அளித்தப் பெண் தொடர்பான தகவல்கள், எஃப்.ஐ.ஆர் எப்படி வெளியானது.

இப்படி இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி தைரியமாக வெளியே வந்து புகார் அளிப்பார்கள். வரும் 30-ம் தேதி இந்த அரசை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இரண்டுமுறை ஆளுநரை சந்தித்திருக்கிறோம். மீண்டும் ஆளுநரை விரைவில் சந்திப்போம். குற்றவாளிகளும், அதற்கு துணைப்போனவர்களும் தப்பிக்க முடியாது என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்

Manmohan Singh: ``சூழ்ச்சி அரசியல் அவருக்கு வராது...'' - அப்பா குறித்து மனம் திறந்த மகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் அதிகாரத்துக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதிரடி நடவடிக்கைகள், அரசியல் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள், பல்வேறு விமர்சனங... மேலும் பார்க்க

Manmohan Singh: `9 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு கேட்ட கேள்வி' -மெய்சிலிர்த்த மருத்துவர் பகிர்வு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த காலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 10 முதல் 11 மணிநேரம் நீண்ட அந்த சிகிச்சைக்குப் பிறகு முதலில் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டத... மேலும் பார்க்க

மாறிய சாட்டை, வேடிக்கை பார்த்த நிர்வாகிகள்... அண்ணாமலை சாட்டையடி நிகழ்வு.. நடந்தது என்ன?

“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், திமுகவை கண்டித்து எனக்கு நானே சாட்டையடி கொடுத்துக் கொள்ளப் போகிறேன்.” என்று பாஜக மாநில... மேலும் பார்க்க

Manmohan Singh: ``எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிய காரணம் என்ன?'' -மன்மோகன் சிங் சொன்ன பின்னணி

இந்தியாவின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92-வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

கட்சி நன்கொடை: பாஜக-வுக்கு ரூ.2244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி; மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு...?

பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அதன் மூலம் அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க பணம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்... மேலும் பார்க்க

Manmohan Singh: `திடீர் உடல் நலக்குறைவு; காலமானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்'

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.Manmohan Singhமன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார். அதேமாதிரி, 90 களில் நிதிய... மேலும் பார்க்க