சாக்லேட்தான் உணவு: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!
வீட்டு உரிமையாளருக்கு ரூ.19.17 லட்சம் வழங்க கட்டட ஒப்பந்தகாரருக்கு உத்தரவு
தூத்துக்குடியில் வீட்டு உரிமையாளருக்கு ரூ. 19.17 லட்சம் வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியை சோ்ந்த ஜோதிமணி என்பவா் வீடு கட்டுவதற்காக ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் செய்தாா். அதன்படி, கட்டுமானப் பணிக்கான தொகையை அவருக்கு வழங்கிவிட்டாராம். ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி தரமாக கட்டடத்தை கட்டாமல், தரமற்ற முறையில் கட்டடத்தை கட்டியிருப்பதால் கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த அவா், தூத்துக்கடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட குறைதீா் ஆணைய தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா் ஆ.சங்கா் ஆகியோா், ஒப்பந்ததாரரின் சேவைக்குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு, அவரிடம் பெற்ற தொகையான ரூ. 18 லட்சத்து 12 ஆயிரத்து 396, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ. ஒரு லட்சம் மற்றும் வழக்கு செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 19 லட்சத்து 17ஆயிரத்து 396 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.